ஒரு பொண்ணு அப்படியே அப்பா மாதிரி.. இன்னொன்னு அச்சு அசல் அம்மாவே தான்.. தேவயானி மகள்களை பாருங்க!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்திய நடிகை தேவயானியின் மகள்களின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
தொட்டாச் சிணுக்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை தேவயானி அறிமுகம் ஆனாலும், நடிகர் அஜித்தின் காதல் கோட்டை படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மனங்களில் தேவயானி இடம் பிடித்தார்.
இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த நட்சத்திர தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

காதல் கோட்டையின் ராணி
1996ம் ஆண்டு இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த காதல் கோட்டை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த தேவயானிக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்து கிடைத்தது. காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற நலம் நலமறிய ஆவல், காலமெல்லாம் காதல் வாழ்க என அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தன.

விஜய் முதல் விக்ரம் வரை
நடிகர் விஜய்யுடன் இணைந்து நினைத்தேன் வந்தாய், ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார் தேவயானி. ப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுடனும் தேவயானி நடித்துள்ளார். சியான் விக்ரம் உடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். சரத்குமார் உடன் ஜோடி போட்டு தேவயானி நடித்த சூர்ய வம்சம் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

வெற்றிக் கோலங்கள்
சற்றே சீனியர் நடிகை ஆன உடனே சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. உடனடியாக சீரியல் பக்கம் ஒதுங்கினார் தேவயானி. கோலங்கள் சீரியலில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த தமிழக பெண்கள் மனதிலும் சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த தேவயானி ஒரு கட்டத்தில் சினிமா, சின்னத்திரை என இரண்டையுமே விட்டு ஒதுங்கி ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.

2 பெண் குழந்தைகள்
2001ம் ஆண்டு இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவயானி. இந்த நட்சத்திர தம்பதியினருக்கு பிரியங்கா மற்றும் இனியா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது தேவயானி மகள்களின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.

அப்பா மாதிரியே
தேவயானியின் மகள் பிரியங்கா பார்க்க அப்படியே அச்சு அசலாக இயக்குநர் ராஜகுமாரனை போலவே தோற்றமளிக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சகோதரிகள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

அச்சு அசல் தேவயானி தான்
இன்னொரு மகளான இனியா அச்சு அசல் நடிகை தேவயானி போலவே இருக்கிறார். 17 வயதாகும் இனியா சமீபத்தில் சேலை கட்டி எடுத்துக் கொண்ட புகைப்படடங்களை பார்த்த ரசிகர்கள் ஜூனியர் தேவயானி ரெடி என்றும் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சூப்பரான ஹீரோயின் ரெடி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications