Devayani: கதாநாயகியாக களமிறங்கும் தேவயானி மகள்? இனியாவிற்கு அடித்த லக்.. என்ன படம் தெரியுமா!

சென்னை: நடிகை தேவயானியின் மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களில் மனதில் இடம்பிடித்தார். அம்மாவைப் போல மகளும் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் சொந்த முயற்சியால் பாடகியாகி உள்ள இனியா கதாநாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2000களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தேவயானி நடித்த காதல் கோட்டை, சூர்ய வம்சம், நீ வருவாய் என போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றன. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Devayani Rajakumaran iniya
Photo Credit:

தேவயானி மகள் இனியா: நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய திரைப்படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரன், தேவயானி தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் இனியா, Zee தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை முதல் முதலாக பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். திறம்பட இசையை கற்று நேர்த்தியாக பாடி அசத்திய இனியா பல சுற்றுகளில் அசத்தலான பாடல்களை பாடி நடுவர்கள் மனதில் இடம்பிடித்து அடுத்தடுத்த கட்டத்திற்கு வந்தார். ஆனால், இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டார்.

இனியாவிற்கு அடித்த லக்: இந்நிலையில், தற்போது இனியா படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு இயக்குநர் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் சாய் குமார் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 'கோர்ட்' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்றது. இந்த திரைப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை தியாகராஜன் வாங்கி உள்ளார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தேவயானியின் மகள் இனியா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாக வில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X