Vijay - அப்பாவுக்கு முன் இப்படியா நடந்துகொள்வார்.. விஜய்யை விமர்சித்த தேவயானி கணவர்

சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய்யை இயக்குநரும், தேவயானி கணவருமான ராஜகுமாரன் விமர்சித்திருக்கிறார்.

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான்,மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், வையாபுரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யும் - லோகேஷ் கனகராஜும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: விஜய் கடந்த 22ஆம் தேதி தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி ஃபர்ஸ்ட் சிங்கிளும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டட்து. இரண்டுக்குமே ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட் சிங்கிளில் விஜய்யின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். விஜய்க்கு இந்தப் படம் கட்டாயம் ஹிட்டாக வேண்டும் என்ற சூழல் ஏற்கனவே உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Devayani Husband Rajakumaran Criticized Vijay for varisu movie

வாரிசு: லியோ படத்துக்கு முன்னதாக மிகப்பெரிய ஏதிர்பார்ப்போடு வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார் விஜய். தமிழ்நாடு, கேரளாவில் தனது மார்க்கெட் சிறப்பாக இருக்கும் சூழலில் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்திவிடலாம் என்ற கணக்கை வாரிசு படத்தின் மூலம் போட்டு வைத்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக வாரிசுடன் களமிறங்கிய துணிவு கதை ரீதியாக பெட்டராக இருந்ததன் காரணமாகவும் வாரிசு சறுக்கியது.

என்ன காரணம்: அதேசமயம் துணிவு படம் மட்டுமே காரணம் இல்லை. வாரிசு குடும்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம். எப்போது குடும்ப செண்ட்டிமெண்ட் படங்களுக்கு ரசிகர்களிடம் மவுசு இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அந்த எமோஷனை சரியாக ரசிகர்களுடன் கனெக்ட் செய்யும்படி படத்தை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் வாரிசு படத்திலோ செண்ட்டிமெண்ட்டை ஒப்புக்கு வைத்துவிட்டு விஜய்யின் நடிப்பையும் ரொம்பவே கெடுத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. இதுதான் வாரிசு படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

விமர்சித்த இயக்குநர்: இந்நிலையில் இயக்குநரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் வாரிசு படத்தில் விஜய்யை விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "வாரிசு படத்தில் சரத்குமார் மட்டும் தான் சரியாக நடித்திருந்தார். அவரை தவிர்த்து வேறு எந்த ஒரு நடிகரும் சரியாக நடிக்கவே இல்லை. விஜய்யும் தவறாகவே நடித்திருந்தார். ஒரு தந்தையின் முன் ஒரு மகன் இப்படித்தான் ஆணவமாக நடந்துகொள்வாரா? அதை அவருடைய தந்தையிடம் வெய்துகொள்ளட்டும்.

ஃபாலோ செய்வார்கள்: அதை அவர் திரையில் செய்ய வேண்டாம், ஏனென்றால் அவர் செய்வதை பார்த்துவிட்டு, ரசிகர்கள் அவர்களுடைய தந்தையின் முன் அதே போல் தான் செய்வார்கள்" என்றார். ஏற்கனவே லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளில் வாயில் சிகரெட்டுடன் விஜய் ஆடுவது இப்போதைய தலைமுறைக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என விமர்சனம் எழுந்திருப்பதும்; பாடலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X