Exclusive - யப்பா தேவயானி கணவர் ஒரு படத்தை பாராட்டிட்டாரு.. அந்தப் படம் டிஸ்டர்ப் பண்ணிடுச்சாம்

சென்னை: இயக்குநரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தமிழில் சில படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். அந்தப் படங்களில் நீ வருவாய் என படம் மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது சின்மாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கியிருக்கும் அவர் சமீப காலமாக நிறைய பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்தவகையில் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேகமாக கொடுத்த பேட்டியில் அவர் சொல்லியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விக்ரமனின் உதவி இயக்குநராக இருந்த ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். அது பெரிய வரவேற்பை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க முதல் இரண்டு படங்களில் தேவயானியைத்தான் ஹீரோயினாக போட்டிருந்தார் அவர். அப்போது பழக்கமான இரண்டு பேரும் காதலிக்க தொடங்கினார்கள்.

எதிர்ப்பை மீறி திருமணம்: தேவயானியும், ராஜகுமாரனும் காதலிக்கும் விஷயம் திரைத்துறையில் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்க; தேவயானி வீட்டுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் ராஜகுமாரனை தீவிரமாக காதலித்த அவர்; வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். திருமணத்துக்கு பிறகு தேவயான் பிஸியாக இருந்தாலும்; ராஜகுமாரன் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

Devayani s Husband Rajakumaran Praises Thalaivar Thambi Thalaimayil Film in Exclusive Filmibeat Tamil Interview
Photo Credit:

ராஜகுமாரன் கொடுக்கும் பேட்டிகள்: இடையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. சூழல் இப்படி இருக்க சமீப காலமாக பல சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அப்படி அவர் கொடுக்கும் பேட்டியில் பேசும் விஷயங்கள் சர்ச்சையை கிளப்புகின்றன. முதலில் மகேந்திரன், கமல்ஹாசன் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பிய அவர்; தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

ரஜினி, சிவகார்த்திகேயன் பற்றி: அதனையடுத்து கொடுத்த இன்னொரு பேட்டியில் ரஜினி நடித்த ஜெயிலர், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ஆகிய படங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இப்போது வரும் எல்லா படங்களையும் அவர் குறை சொல்கிறாரே; எனில் அவருக்கு எந்தப் படம்தான் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் அவர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

ராஜகுமாரனின் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "நீ வருவாய் என படத்தின் ப்ரிண்ட்டை க்ளீன் செய்வதற்காக ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்றிருந்தேன். அப்போது தலைவர் தம்பி தலைமையில் படத்தை பார்த்தேன். நல்ல படம். குறை சொல்ல எதுவும் இல்லை. சின்ன கன்டென்ட்டை வைத்து நன்றாக செய்திருக்கிறார்கள். அந்தப் படம் என்னை இரண்டு, மூன்று நாட்கள் டிஸ்டர்ப் செய்துவிட்டது. நல்ல படமாக இருந்தால் அந்தப் படம் நம்மை இரண்டு, மூன்று நாட்களுக்கு டிஸ்டர்ப் செய்யும். நீ வருவாய் என படத்தின் இரண்டாவது பாகத்துக்கான வேலைகளை என்னை அந்தப் படம் செய்யவிடவில்லை. நன்றாக இருந்தது. அப்படம் ஹிட்டானதில் ஆர்.பி.சௌத்ரி சாருக்கும் மகிழ்ச்சி" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X