அஜித்தை இயக்கப்போகும் தேவயானி கணவர்?.. ஆஃபிஸிலும் பேசிட்டாராம்.. வர சொல்லிருக்காங்களாம்.. என்னங்க இது?

சென்னை: நடிகை தேவயானியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் சில படங்களை இயக்கிவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஒன்றிரண்டு படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர் நிறைய பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்தவகையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பாக பேசியிருப்பது ஏகே ரசிகர்களிடம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜகுமாரன் தேவயானியை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அதற்கு பிறகு ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சில படங்களில் நடித்தார். அதுவும் கைகொடுக்காததால் கேமரா முன்பு தலை காண்பிக்காமல் இருந்தார். இப்போது அதிகம் பேட்டிகளை கொடுத்துவரும் அவர்; சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் ஏகே ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தேவயானி கணவரின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நீ வருவாய் என படத்துடைய இரண்டு மற்றும் மூன்றாம் பாக கதைகளை ரெடி செய்துகொண்டிருக்கிறேன். அஜித் தரப்பிலும் பேசிக்கொண்டிருக்கிறேன். சரியான கதையுடன் நாம் போன்றால் கண்டிப்பாக அவர் அந்தப் படத்தில் நடிப்பார். ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களையும் ஸ்டார்ட் செய்யும்படி நான் பிளான் செய்திருக்கிறேன். இரண்டாவது பாகத்தில் அஜித் தொடர்பான காட்சிகள் குறைவாக இருக்கும். மூன்றாவது பாகத்தில் அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால்தான் அவர் நடிக்க ஒத்துக்கொள்வார்.

Devayani Husband Rajakumaran Talking to Ajith s Team About Nee Varuvai Ena Sequel
Photo Credit:

ஆஃபிஸில் பேசினேன்: இப்போது ஏன் இதை சொல்கிறேன் என்றால் அஜித் ஆஃபிஸில் இதுதொடர்பாக பேசினேன். அவர்களும், நீங்கள் வாருங்கள். பார்க்கலாம் என்று சொன்னார்கள். அந்தப் படத்தை தயாரிக்கக்கூடிய அளவுக்கு தயாரிப்பாளர் வேண்டும். நீ வருவாய் என படத்தை எடுத்த ஆர்.பி.சௌத்ரியிடம் இன்னும் இதுபற்றி பேசவில்லை. நீ வருவாய் என படத்தில் அஜித்தை ராணுவ அதிகாரியாக காட்டியிருப்பேன். அப்படத்தில் அஜித் இறந்துவிடுவார் என்று இருக்கும். அதேசமயம் அவர் இறந்தது மாதிரி காட்சி இருக்காது. அப்படி காட்ட எனக்கு விருப்பமில்லை. எனவே வரும் பாகங்களில் அஜித் சாகவில்லை என்று என்னால் எளிதாக மாற்ற முடியும்" என்றார்.

கிண்டலை சந்திக்கும் பேட்டி: ராஜகுமாரின் இந்தப் பேட்டியை பார்த்த அஜித் ரசிகர்கள் உச்சபட்ச அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதேசமயம் இதெல்லாம் நடக்கும் விஷயமா? கண்டிப்பாக நடக்காது என்று தங்களுக்கு தாங்களே சொல்லி ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள். முன்னதாக ராஜகுமாரன் இதே மாதிரி சில பேட்டிகள் கொடுத்து செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் இயக்குநர் மகேந்திரன் பற்றி, "ராம நாராயணன் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். ஆனால் ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய மகேந்திரனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் மகேந்திரனின் ஒரு படத்தைக்கூட பார்த்ததில்லை. அவர் படங்களை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமுமில்லை.

செம ட்ரோல்கள்: சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு சாதாரண படம் அவ்வளவுதான். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு பிட்டு கதைதான் அந்த ஒட்டுமொத்த படமும். மனைவியின் தங்கையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் முழு பட கதையே. இது ஒரு பெரிய விஷயமா?.. அதற்காகவா இரண்டரை மணி நேரம் படம்" என பேசியிருந்தார். அதனையடுத்து ரசிகர்கள், திரைத்துறையினர் என அனைவரும் அவரை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X