Devayani childhood photo: வாவ்.. சின்ன வயசுல தேவயானி எப்படி இருக்காங்க பாருங்க.. நகுல் செம க்யூட்!

சென்னை: நடிகை தேவயானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பி நகுலை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி வங்காளம், மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வந்தார். 1995ல் கார்த்திக் நடிப்பில் வெளியான தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அப்படியே தமிழ் நடிகையாகவே மாறிவிட்டார்.

விஜய், அஜித், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தேவயானி சின்னத்திரை தொடர்களில் தற்போது லீடு ரோலில் நடித்து வருகிறார்.

Devayani shares her rare childhood photo in instagram

டாப் ஹீரோயின்: தொட்டாச்சிணுங்கி படத்தைத் தொடர்ந்து அஜித் உடன் கல்லூரி வாசல் படத்தில் நடித்த தேவயாணிக்கு அந்த படம் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. ஆனால், மீண்டும் அஜித் உடன் அவர் இணைந்து நடித்த காதல் கோட்டை படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்து அவரை டாப் ஹீரோயினாக மாற்றியது.

சூர்யவம்சம், மறுமலர்ச்சி, தொடரும், வல்லரசு, அப்பு, தெனாலி, நினைத்தேன் வந்தாய், பிரெண்ட்ஸ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.

Devayani shares her rare childhood photo in instagram

சீரியலில் சிக்ஸர்: சீனியர் நடிகையான பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிரடியாக குறைந்தது. அந்த நேரத்தில் சின்னத்திரையில் அதிரடியாக கோலங்கள் சீரியலில் நடித்து இங்கேயும் சிக்ஸர் அடித்தர் தேவயானி.

மஞ்சள் மகிமை, முத்தாரம், கொடி முல்லை, ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி, மாரி என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வந்த தேவயானி சில காலம் நடிப்பை விட்டே விலகி பள்ளி ஒன்றில் டீச்சராக பணியாற்ற ஆரம்பித்தார். தற்போது, மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமாவில் தலை காட்ட துவங்கி உள்ளார்.

Devayani shares her rare childhood photo in instagram

சின்ன வயசுல தேவயானி: நடிகை தேவயானியின் மகளை பார்த்தாலே அச்சு அசல் தேவயானி போல இருக்கு என சமீபத்தில் அவரது மகளின் போட்டோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், தனது சிறு வயது போட்டோவையே நடிகை தேவயானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

அப்பவே அப்படியொரு அழகா என ரசிகர்கள் தேவயானியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து லைக்குகளை குவித்து வருகின்றனர். இயக்குநர் ராஜகுமரனை திருமணம் செய்துக் கொண்ட தேவயானிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Devayani shares her rare childhood photo in instagram

நகுல் எப்படி இருக்காரு பாருங்க: பாய்ஸ் படத்தில் குச்சி முடியுடன் குண்டாக நடித்த நகுல் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம ஹேண்ட்ஸம் ஆன ஹீரோவாக அறிமுகமானார்.

இந்நிலையில், தேவயானி தனது தம்பி நகுலை தூக்கி வைத்துக் கொண்டு அந்த போட்டோவில் போஸ் கொடுத்துள்ள நிலையில், நகுல் எப்படி க்யூட்டா இருக்காரு பாருங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X