யாராவது ஏதாவது பட்டம் கொடுத்தா நல்லாருக்கும்.. போட்டுக்கலாம்!

By Sudha

சென்னை: எப்படிப்பா இப்படி... என்று அத்தனை பேரும் வியக்கும் வகையில், திருமதி தமிழ் படத்துக்கான விளம்பரங்களில் பட்டையைக் கலக்கி வருகின்றனர் தேவயானியும், அவரது ஹீரோ கணவர் ராஜகுமாரனும்.

தேவயானியும், ராஜகுமாரனும் இணைந்து நடித்துக் கலக்கியுள்ள முதல் படம்தான் இந்த திருமதி தமிழ். ராஜகுமாரன்தான் இதில் அதிரடி ஹீரோ.

கெளபாய் தொப்பி, இறுக்கக் கட்டிய பேன்ட், முகத்தோடு ஒட்டிய கருப்புக் கண்ணாடி, பெயிண்ட் செய்யப்பட்ட அழகு முகம் என அசத்தலாக காட்சி தருகிறார் ராஜகுமாரன்.

அதிரடி ஸ்டில்கள் வெளியீடு

அதிரடி ஸ்டில்கள் வெளியீடு

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் அதிரடி ஸ்டில்களை வெளியிட்டனர். அதில் ராஜகுமாரன் கொடுத்த போஸ்களைப் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் விட்டனர்.

ராமராஜனையும் தாண்டி

ராமராஜனையும் தாண்டி

ராமராஜனுக்குப் பிறகு அவர் போல ஒரு ஹீரோவும் வந்ததில்லை. அந்தக் குறையைப் போக்க வராது வந்த மாமணி போல காட்சி தருகிறார் ராஜகுமாரன் என்பதுதான் அனைவரின் டாக்காக உள்ளது.

இப்ப இப்படி ஒரு விளம்பரம்

இப்ப இப்படி ஒரு விளம்பரம்

தற்போது புத்தம் புதிதாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர் ராஜகுமாரன்-தேவயானி தம்பதியினர். அதாவது ராஜகுமாரனுக்கு யாராச்சும் பட்டம் தாங்களேன் என்ற வேண்டுகோளுடன் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலக நாயகன் மாதிரி...

சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலக நாயகன் மாதிரி...

அதுகுறித்த விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பதாவது... யாராவது ஏதாவது பட்டம் கொடுத்தா நல்லா இருக்கும் போட்டுக்கலாம். பின் குறிப்பு - சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலக நாயகன் .. இது மாதிரி.

இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவீங்களாம்

இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவீங்களாம்

ராஜகுமாரனுக்கு பட்டம் தர விரும்புவோர் 7299765460 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் அதை அனுப்பி வைக்கலாமாம்.

என்ன பரிசு தருவாங்க..?

என்ன பரிசு தருவாங்க..?

பட்டம் தருவோருக்கு பரிசு தரப்படுமா என்று தெரியவில்லை. அதுகுறித்து விளம்பரத்தில் சொல்லப்படவும் இல்லை. ஒரு வேளை பட டிக்கெட்டை ப்ரீயா கொடுப்பாங்களோ என்னவோ தெரியவில்லை...

அதுதான் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் படத்தைப் போடப் போறாங்களே.. நிச்சயம் ஆயிரக்கணக்கான டிக்கெட் ப்ரீயாத்தான் இருக்கும். தந்தாலும் தருவாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X