அஜீத்துடன் சேரும் இன்னொரு அஜீத்!

By Shankar

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல 55 படத்தில் அவருடன் இன்னொரு அஜீத் இணைகிறார்.

ஆனால் இந்த அஜீத், நடிகரல்ல... நடிகை. மலையாளத்தில் சினிமா மற்றும் தொடர்களில் நடித்து வரும் தேவி அஜீத் என்பவர்தான் அஜீத்துடன் நடிக்கவிருப்பவர்.

ஏ எம் ரத்னம்

ஏ எம் ரத்னம்

ஏ எம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை எட்டிவிட்டது. அனுஷ்காவும் த்ரிஷாவும் ஹீரோயின்களாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

தந்தை மகன்

தந்தை மகன்

இந்தப் படத்தில் மீண்டும் தந்தை மற்றும் மகன் வேடங்களில் அஜீத் நடிக்கிறார். வரலாறு, அசல் படங்களுக்குப் பிறகு மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அஜீத்.

மேலும் ஒரு அஜீத்

மேலும் ஒரு அஜீத்

தற்போது இப்படத்தில் இன்னொரு அஜீத் இணைந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் பெயர் தேவி அஜீத். மலையாள நடிகையான இவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தேவி அஜீத் ஒரு சில மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளவர்.

சூறையாடல்

சூறையாடல்

தேவி அஜீத் இதற்கு முன் தமிழில் வெளியான சூறையாடல் என்ற படத்தில் நடித்துள்ளார். தல 55 படத்தில் நடிப்பது குறித்து தேவி அஜீத் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் கவுதம் மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ்

கவுதம் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு வெளியான கையோடு இசை வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X