ஆயுத பூஜை ஸ்பெஷல்.. தேவி, ரெமோ, றெக்க!

By Shankar

வருகிற ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், அந்த வீக்கெண்டில் சிவகார்த்திகேயனின் ரெமோ, பிரபுதேவாவின் தேவி, விஜய் சேதுபதியின் றெக்க என மூன்று பெரிய தமிழ் படங்கள் வெளிவருகிறது.

தேவி

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இன்னொரு ஹாரர் படம் தேவி. 12 வருட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

Devi, Remo, Rekka... Ayudha Pooja Special

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. தனது மறுபிரவேசம் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வெளியிடுகிறார் பிரபுதேவா.

ரெமோ

சிவகார்த்திகேயன் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் என்பதாலும் அவ்வை சண்முகி பாணியில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடித்திருப்பதாலும் இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. பட்ஜெட் முதல் ப்ரொமோஷன் வரை தொட்டதுகெல்லாம் பிரம்மாண்டம்.

Devi, Remo, Rekka... Ayudha Pooja Special

எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகுமா? பார்க்கலாம்.

றெக்க

விஜய் சேதுபதி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் றெக்க. இந்த ஆண்டில் வெளியாகும் ஆறாவது விஜய் சேதுபதி படம் இது. இதற்குமுன்பு வெளியான ஐந்து படங்களுமே நல்ல வசூலை குவித்துள்ளது.

Devi, Remo, Rekka... Ayudha Pooja Special

இது ஒருபக்கம் இருக்க தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட தேவதை என்றழைக்கப்படும் லக்ஷ்மி மேனன்தான் இப்படத்தின் ஹீரோயின். இது 'றெக்க'க்கு கூடுதல் பலம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X