Vijay Antony Daughter - விஜய் ஆண்டனி வீட்டிலா இப்படி.. என்னால் ஏத்துக்கவே முடியால்.. கலங்கிய இசையமைப்பாளர்
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) விஜய் ஆண்டனி வீட்டில் இப்படி நடந்ததை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என தேவிஸ்ரீபிரசாத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், மீரா, லாரா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். மனைவி பாத்திமா விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக்கொள்ள மகள்களில் ஒருவரான மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.

தற்கொலை: படிப்பில் மட்டுமின்றி மற்ற விஷயங்களில் படு ஆக்டிவ்வான மீரா கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்தார். அவர் நேற்று அதிகாலை தூக்கு போட்டுக்கொண்டார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக யாரையும் அதிர்ந்துகூட பேசிடாத விஜய் ஆண்டனியை நிலைகுலைய செய்திருக்கிறது. அவருக்கு பலரும் ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
எந்த பிரச்னையும் இல்லை: விஜய் ஆண்டனியின் மகள் ரொம்பவே தைரியமானவர் என்றும்; அவருக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை; இருப்பினும் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லையே என அவரது தோழிகளும், ஆசிரியைகளும் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் போல் நல்ல பெண்ணை பார்க்கவே முடியாது என அவரது வீட்டில் வேலை செய்தவரும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சடங்கு: மீராவின் உடல் இன்று காலை இறுதி ஊர்வலமாக தேவலாயத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கை முடிக்கப்பட்டது. அதனையடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அடக்கம் செயப்பட்டது. இந்தச் சூழலில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் மீராவின் இறப்புக்கு உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை: இதுகுறித்து அவர் பேசுகையில், "விஜய் ஆண்டனி அவ்வளவு மென்மையானவர். அவரது பயணம் சந்தோஷமாகத்தான் இருந்தது. யாருக்கு என்ன கெடுதல் நடந்தாலும் அவர் அதை ரொம்பவே சென்சிட்டிவாக எடுத்துக்கொள்வார். அவர் வீட்டிலா இப்படி நடக்க வேண்டும். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த சிறிய வயதில் ஏன் இப்படி செய்ய வேண்டும் என புரியவே இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சொல்கிறேன் யாரும் இந்த முடிவை எடுக்காதீர்கள். எல்லோருக்கும் பிரச்னை வரும். நாம் ஏதாவது செய்துகொள்ளும் முன்னதாக நமது பெற்றோர் குறித்தும் கூட இருப்பவர்கள் குறித்து யோசிக்க வேண்டும். விஜய் ஆண்டனி குடும்பத்திற்காக நான் வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.
விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்களின் புகைப்படங்கள்


Click it and Unblock the Notifications











