குட் பேட் அக்லி படத்திலிருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்?.. இது என்ன புது பஞ்சாயத்து
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துவருகிறார் அஜித்குமார். மெகா ஹிட் படமான மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய இயக்குநர் என்பதாலும்; அவர் அஜித்தின் திவீரமான ரசிகர் என்பதாலும் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் குட் பேட் அக்லி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அஜித் நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். படத்தின் டைட்டில் கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு அஜர்பைஜானில் ஷூட்டிங் தொடங்கியது. இருந்தாலும் படத்தின் வேலைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. இதன் காரணமாக விடாமுயற்சியை விட்டுவிட்டார்களோ என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

குட் பேட் அக்லி: அஜித் எப்போதுமே ஒரு படத்தை முடித்து சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்வார். ஆனால் விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும்படி பார்த்துக்கொண்டார். அதன்படி அந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக நயன்தாராவும்; வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பு: அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கி தோல்வியடைந்த ஆதிக்; அடுத்ததாக விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. எனவே அவர் அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக். அதன் காரணமாக தரமான ஃபேன் பாய் சம்பவமாக இந்தப் படத்தை கொடுப்பார் ஏகே ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
எப்போது ரிலீஸ்: இப்போது அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார். விடாமுயற்சி கதை மீது எவ்வளவு நம்பிக்கையை அஜித் வைத்திருக்கிறாரோ அதே நம்பிக்கையைத்தான் குட் பேட் அக்லி மீதும் வைத்திருக்கிறார் என்றும்; நிச்சயமாக இந்தப் படம் தனக்கும், ஆதிக்கிற்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருவதாக கூறப்படுகிறது. படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது.
நீக்கப்பட்ட தேவிஸ்ரீ பிரசாத்: இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க இப்போது அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்றும்; அதற்கு காரணம் கங்குவா படத்தில் அவரது இசைக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம்தான் என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதிலாக அனிருத் அல்லது ஜிவி பிரகாஷை இசையமைக்க வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











