இது என்னடா தில்லானா மோகனாம்பாள் பட பாட்டுக்கு வந்த சோதனை.. அதையும் தேவி ஸ்ரீ பிரசாத் ஷேர் பண்ணலாமா?
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தில்லான மோகனாம்பாள் பட பாடல் வீடியோவை சமந்தாவின் குத்தாட்ட பாடலுடன் இணைத்து எடிட் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் "ஊ சொல்றீயா மாமா" பாடல் ஏற்கனவே ஆண்களுக்கு எதிரான பாடல் என சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், அடுத்த சர்ச்சையை அந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தே ஆரம்பித்து வைக்கலாமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கமெண்ட் பக்கத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

சமந்தாவின் குத்தாட்ட பாடல்
புஷ்பா படத்திலேயே சமந்தாவின் குத்தாட்ட பாடல் எப்போது வரும் என்று தான் பாதி பேர் தியேட்டருக்கே சென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் ட்வீட் போட்டு வருகின்றனர். சமந்தாவின் குத்தாட்ட பாடலுக்கு நாக சைதன்யாவிடம் இருந்தே மறைமுக எதிர்ப்பும் எச்சரிக்கையும் வந்துள்ளது மேலும் பிரச்சனையை பெரிதாக்கி உள்ளது.

ஓரங்கட்டப்பட்ட ராஷ்மிகா
வெறும் பாவடை உடன் நடித்து கவர்ச்சியில் ரசிகர்களின் கண்களை கூச வைத்தாலும் சமந்தாவை ஒரே ஒரு ஐட்டம் டான்ஸுக்கு அழைத்து வந்து புஷ்பா பட இயக்குநர் சுகுமார் ராஷ்மிகா மந்தனாவை இருட்டடிப்பு செய்து விட்டார் என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஆண்கள் சங்கம் புகார்
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் பாடல் முதல் அடிடா அவள பாடல் வரை ஏகப்பட்ட பாடல்கள் பெண்களுக்கு எதிராக வெளியான நிலையில், புஷ்பா படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்ட பாடலின் வரிகள் ஆண்களை இழிவு படுத்தி விட்டதாக ஆண்கள் சங்கம் "ஊ சொல்றியா" பாடலுக்கு எதிராக புகார்கள் கொடுத்துள்ளனர்.

நலம்தானா பாடல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டிய பேரொளி பத்மினி நடிப்பில் உருவான தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம்பெற்ற காவிய பாடலான நலம்தானா பாடல் வீடியோவுக்கு சமந்தாவின் ஐட்டம் சாங்கை எடிட் செய்து ரசிகர் ஒருவர் வைரலாக்கி உள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்த வேலை
இந்த பாடலை இப்படி எடிட் பண்ணது யாராக இருந்தாலும் என் பாராட்டுக்கள் என அந்த எடிட் செய்யப்பட்ட பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஷேர் செய்து வெகுவாக பாராட்டி ரசிகர்களிடம் வாங்கி கட்டி வருகிறார்.

விளாசிய ரசிகர்கள்
புஷ்பா படத்திற்கு உருப்படியா ஒரு பிஜிஎம் கூட போட தெரியல.. இதில இந்த பழைய பாடலுக்கு சமந்தாவின் குத்தாட்ட பாடல் சிங்க் ஆகுதுன்னு சந்தோஷம் வேற என டோலிவுட் ரசிகர்கள் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை வெளுத்து வாங்கி வருகின்றனர். அகண்டா படத்திற்கு தமன் எப்படி பிஜிஎம் போட்டார் பாருங்க அது பிஜிஎம் புஷ்பா இரண்டாம் பாகத்துக்காகவது பிஜிஎம் உருப்படியா போடுங்க என டிஎஸ்பியை அடித்து துவைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











