குட் பேட் அக்லி படத்தில் அஜித் ஒரு விஷயம் செய்திருக்கிறார்.. தேவிஸ்ரீ பிரசாத் சொன்ன சீக்ரெட்
சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் இடையில் தடைப்பட்டிருந்த சூழலில் சமீபத்தில் முன்னர் அஜர்பைஜானில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கிறார் அஜித்.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது.
குட் பேட் அக்லி: இப்போது மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கும் நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், நயன்தாராவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
விறுவிறு ஷூட்டிங்: படமானது அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ஜப்பான் செல்லலாம் என்றும்; அந்த ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தேவிஸ்ரீ பிரசாத் சொன்ன சீக்ரெட்: இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குட் பேட் அக்லி படத்தில் அஜித் சார் மாஸாக ஒரு நடனம் ஆடியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாக அஜித்துக்கு நடனம் வராது என்ற விமர்சனம் காலங்காலமாக இருக்கிறது, இப்போது தேவிஸ்ரீ பிரசாத் இப்படி கூறியிருப்பதால் அந்த விமர்சனத்தை இதில் ஏகே உடைப்பார் என்று அஜித்தின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











