பார்ரா.. தேவிக்கும் பார்ட் டூ வருதாம்ப்பா!
ஏஎல்.விஜய் இயக்கிய தேவி திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை: ஏஎல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா தமன்னா நடித்த தேவி திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத், ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தேவி.

சாதுவான பெண்ணாக இருக்கும் பிரபுதேவாவின் மனைவி தமன்னாவின் உடம்புக்குள் சினிமா ஆசையில் இருக்கும் தேவி என்ற பெண்ணின் ஆவி புகுந்தபிறகு செய்யும் அட்டகாசங்கள், அதனால் பிரபுதேவா குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் தான் கதை.
டான்ஸ், நடிப்பு, காமெடி என அனைத்து விஷயங்களிலும் தமன்னா சிறப்பாக செயல்பட்டிருப்பார். தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க படக்குழு தீர்மானித்துள்ளது.
தேவி திரைப்படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிப்பில் ரிலீஸ் ஆன குலேபகாவலி, மெர்குரி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து தேவி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
தற்போது ஏஎல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் நடித்திருக்கும் லக்ஷ்மி திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இந்தப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தேவி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா லஷ்மி மேனனுடன் ஆர்ஜே.பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் யங் மங் சங் என்ற நகைச்சுவைத் திரைப்படத்திலும், நிக்கி கல்ராணியுடன் சார்லி சாப்ளின் 2 விலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











