»   »  தேவி-ஐசக் ஜோடியாய் சரண்!

தேவி-ஐசக் ஜோடியாய் சரண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேசட் கடை அதிபர் வில்லியம் ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி கொடுத்த கொலை மிரட்டல் வழக்கில்ஐசக்கும், நடிகை தேவிப்பிரியாவும் இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜோடியாக சரணடைந்துமுன்ஜாமீன் பெற்றனர்.

ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி, தன்னையும், தனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக ஐசக்மற்றும் தேவிப்பிரியாா ஆகியோர் மிரட்டியதாக கூறி அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரின் பேரில், தேவிப்ரி>யா, ஐசக் மீது அடையாறு போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்தவழக்கில் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

அதன்படி இருவரும் இன்று முதல் முறையாக ஜோடியாக சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி பெஞ்சமின் முன்பு சரணடைந்தனர். அதன் பின்னர் இருவருக்கும் உயர்நீதிமன்றஉத்தரவுப்படி முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஏற்கனவே ஐசக்கின் முதல் மனைவி ஸ்டெல்லாவிடம் வரதட்சணைக் கொடுமை செய்ததாக பதிவான வழக்கில்தேவிப்பிரியாவுக்கு உயர்நிதீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் கடந்த வாரம் கோர்ட்டில்சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil