இடுப்பை வெடுக்கு வெடுக்குனு இப்படி ஆட்டுறாரே.. கூகுள் டிரெண்டிங்கில் கலக்கும் பிக் பாஸ் பிரபலம்!
மும்பை: பிரபல இந்தி டிவி நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான டெவொலீனா பட்டாசார்ஜி திடீரென கூகுள் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளார்.
Recommended Video
அதற்கு காரணம் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பெல்லி டான்ஸ் வீடியோ தான்.
இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வந்த டெவொலீனா இடுப்பாட்டும் வீடியோவை வெளியிட்டு இளைஞர்களை கிறங்க வைத்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலம்
சாத் நிபானா சாத்தியா எனும் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டெவொலீனா பட்டாசார்ஜி. சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் இவர். தற்போது பெல்லி நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டு இணையத்தை திணறடித்துள்ளார்.

பெல்லி டான்ஸ்
இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள டெவொலீனா பெல்லி நடனத்தை கற்று வருகிறார். தற்போது இடுப்பாட்டும் தனது பெல்லி டான்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளைஞர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

கூகுள் டிரெண்டிங்
இந்தியளவில் Devoleena Bhattacharjee எனும் பெயரை பலரும் கூகுள் செய்து கூகுள் டிரெண்டிங்கில் இடம்பெறும் அளவுக்கு ஓவர் நைட்டில் தனது பெல்லி டான்ஸ் வீடியோ மூலம் வைரலாகி உள்ளார் டிவி நடிகை டெவொலீனா. அவரது அந்த இடுப்பாட்டும் வீடியோவை ஏகப்பட்ட பிரபலங்களும் லைக் செய்துள்ளனர்.

சீக்கிரமே போடுறேன்
ரசிகர்களை டெம்ப்ட் செய்யும் வீடியோவை வெளியிட்ட டெவொலீனா சில விநாடிகள் ஓடும் வீடியோவை மட்டுமே ஷேர் செய்துள்ளார். இப்போதைக்கு பெல்லி நடனத்தை பயிற்சி பெற்று வருகிறேன். இன்னமும் முறையாக கற்றுக் கொள்ளவில்லை. விரைவில் முழு நடன வீடியோவையும் வெளியிடுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என ரசிகர்களை ரொம்பவே சோதித்துள்ளார்.
குவியுது கமெண்ட்ஸ்
நடனப்பிரியையான டெவொலீனா ஏகப்பட்ட நடன வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், தற்போது வெளியிட்டுள்ள ஹாட்டான பெல்லி டான்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டெவொலீனாவின் நடன திறமையை பாராட்டியும் அவரது அழகை ரசித்தும் ரசிகர்கள் வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











