»   »  தேவ்ஷி கந்தூரி, கவர்ச்சி தந்தூரி ...

தேவ்ஷி கந்தூரி, கவர்ச்சி தந்தூரி ...

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜீனத் அம்மனை உங்களுக்கு நினைவிருக்கிறதா... உங்களுக்கு வயது 40க்கு மேல் என்றால் கண்டிப்பாக நினைவிருக்கும. அதேபோன்ற கட்டழகு மற்றும் ஸ்டன் கவர்ச்சியுடன் நவீன ஜீனத் அம்மனாக களம் குதித்துள்ளார் தேவ்ஷி கந்தூரி... என்னான்னு பார்ப்போமா...

சிக் கவர்ச்சி.. சின்ன உடை

சிக் கவர்ச்சி.. சின்ன உடை

ஜீனத் அம்மன் என்றாலே அவரது சிக்கென்ற கவர்ச்சியும், சல்லிசான உடையும்தான் ஞாபகத்திற்கு வரும். அப்படி ஒரு அட்டாக் கவர்ச்சியுடன் பாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் தூக்கத்தையும் துடைத்துப் போட்டவர் ஜீனத்.

தேவ்ஷி கந்தூரி.. கவர்ச்சி தந்தூரி!

தேவ்ஷி கந்தூரி.. கவர்ச்சி தந்தூரி!

தற்போது ஜீனத் அம்மன் பாணியில் அதே லெவல் கவர்ச்சியுடன் களம் குதித்துள்ளார் தேவ்ஷி கந்தூரி. படு போல்டாகவும், செம செக்ஸியாகவும் காட்சி தரும் கந்தூரி, கவர்ச்சி தந்தூரியாக பாலிவுட்டுக்குள் புகுந்துள்ளார்.

அதே சிட்டி.. அதே ரெட்டி!

அதே சிட்டி.. அதே ரெட்டி!

வழக்கம்போல இவரும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில்தான் நடிக்கிறார். அதே சதீஷ் ரெட்டிதான் இவரையும் நடிக்க கூட்டி வந்துள்ளார்.

சின்ன சேலை.. கவர்ச்சிச் சோலை!

சின்ன சேலை.. கவர்ச்சிச் சோலை!

ஜீனத் அம்மனை எப்படியெல்லாம் கவர்ச்சியாக காட்டினாரோ தேவ் ஆனந்த் அதே பாணியில் இந்தப் படத்திலும் படு கவர்ச்சியாக தேவ்ஷியை காட்டப் போகிறாராம் இயக்குநர் ஹரூன் ரஷீத். சின்ன சேலையில் கவர்ச்சிச் சோலையாக, குட்டி உடையில், கெட்டியான கவர்ச்சியை வெளிக் கொணர்ந்து அவரை மினுமினுக்க வைக்கப் போகிறாராம்.

நான் அம்மனா... குதூகலிக்கும் தேவ்ஷி

நான் அம்மனா... குதூகலிக்கும் தேவ்ஷி

இதுகுறித்து தேவ்ஷி கூறுகையில் ஜீனத் அம்மனைப் போலவே என்னையும் இந்தப் படத்தில் தோன்ற வைக்கவிருப்பது எனக்கு குதூகலத்தைக் கொடுத்துள்ளது. ஜீனத்தைப் போல நானும் புகழ் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வெறும் கால் அழகிலேயே பலரது உள்ளத்தைக் கலைத்துப் போட்டவர் ஜீனத். நானும் அப்படியே என்கிறார் தனது கவர்ச்சிக் கால்களைப் பார்த்தபடி...

ஏற்கனவே எக்கச்சக்கம்... தேவ்ஷி எந்தப் பக்கம்!

ஏற்கனவே எக்கச்சக்கம்... தேவ்ஷி எந்தப் பக்கம்!

ஏற்கனவே சதீஷ் ரெட்டியின் இந்தப் படத்தில் வீணா மாலிக் உள்ளிட்ட பல கவர்ச்சி நடிகைகள் குவிந்து கொண்டு வருகிறார்கள். இதில் தேவ்ஷி வேறுஇப்போது சேர்ந்துள்ளார். எல்லாம் எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை...

ம்ஹூம்... பார்க்கலாம்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Who can forget the sensuous Zeenat Aman in short saris from the film Satyam Shivam Sundaram? Now, here is another actress who is all set to scorch the big screen with her sexy act in a wet sari and Feel the heat she is none other than Dev Anand Dream girl Devshi Khanduri. She will get bold and sexy look in her upcoming movie “The City that Never Sleeps” which is directed by Haroon Rashid and produce by Satish Reddy.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more