மீண்டும் நடிக்க வந்தார் தேவயானி...அதுவும் மெகாஹிட் தயாரிப்பாளரின் படைப்பில்

சென்னை : 1994 ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் கார்த்திக்-ரகுவரன்-ரேவதி நடித்த தொட்டாசிணுங்கி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் தேவயானி. இந்த படத்தில் படு கிளாமரான தோற்றத்தில் நடித்திருந்தார்.

Recommended Video

Actress Devayani Interview | நடிகை தேவயானி உடன் நேர்காணல்

அதன் பிறகு இந்தி, மலையாளம், தமிழில் சில படங்களில் நடித்தார். சிறிது இடைவெளிக்கு பிறகு 1996 ல் குடும்ப பாங்கான தோற்றத்துடன் காதல் கோட்டை படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.அஜித்துடன் இவர் நடித்த அந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது

திருமணத்திற்கு பின் சீரியல்

திருமணத்திற்கு பின் சீரியல்

அதற்கு பின் பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டர்களிலேயே தேவயானி நடித்தார். 2001 ல் டைரக்டர் ராஜகுமாரனை காதலித்து, திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கால் சின்னத்திரையில் தனத பயணத்தை தொடர்ந்தார்.

மீண்டும் தேவயானி

மீண்டும் தேவயானி

கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்த தேவயானி, தற்போது மெகா சீரியல் ஒன்றின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். புதுபுது அர்த்தங்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் மார்ச் 22 ம் தேதி முதல் ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளது.

மெகா தயாரிப்பாளரின் படைப்பு

இந்த மெகா சீரியலை விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, எஸ்தல் னெ்டர்டைன்மென்ட்ஸ் என்ற பேனரில் தயாரித்துள்ளார். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் என்ற தனது பழைய பேனரில் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர், தற்போது படங்கள், டிவி சீரியல்களை தொடர்ந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் அவரது தயாரிப்பு பற்றி அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதி செய்த ஜீ தமிழ்

உறுதி செய்த ஜீ தமிழ்

தேவயானி நடிக்கும் சீரியல் பற்றிய தகவலை ஜீ தமிழ் டிவி.,யும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இது மாமியார் - மருமகள் உறவை சொல்லும் கதை என கூறப்பட்டுள்ளது. மகளிர் தின ஸ்பெஷலாக இந்த சீரியல் வழங்கப்படுவதாகவும் ஜீ தமிழ் டிவி குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X