»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தின் புது மணத் தம்பதிகளான டைரக்டர் ராஜகுமாரன் - நடிகை தேவயானி ஜோடியை கண்ணீர்மல்க ஆசீர்வதித்தார் டைரக்டரின் தாய்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை தேவயானியும், டைரக்டர் ராஜகுமாரனும் திடீர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு புகுந்தவீட்டைக் காண நடிகை தேவயானி, கணவர் ராஜகுமாரனுடன் அந்தியூர் பயணமானார்.

தவிட்டுப் பாளையம் சென்ற அவர்கள், ராஜகுமாரனின் தாய் வீட்டிற்குச் சென்றனர். அங்கு மகனையும், மருமகள் தேவயானியையும் கண்ட அய்யம்மாள்கண்ணீர் விட்டார். உடனே, அய்யம்மாளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர் புது மணத் தம்பதிகள்.

பலகாரக்கடை நடத்தி வந்த அய்யம்மாள், தன் மகனைப் பற்றியும், தன்னைப் பற்றியும் செய்திகள் வெளியே வந்தபிறகு பலகாரக் கடை விற்பனையைமுற்றிலும் நிறுத்தி விட்டார்.

ராஜகுமாரனின் தம்பியும் லாரி கிளீனர் வேலையை விட்டு விட்டு வீட்டில் உள்ளார். இவர்கள் எல்லோரும் மொத்தமாக சென்னையில் செட்டிலாகத்திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

தாயிடம் ஆசி பெற்ற ராஜகுமாரன், நேராக தனது பழைய முதலாளி கோபால் செட்டியார் வீட்டிற்குச் சென்று ஆசி வாங்கினார். பின்னர் இருவரும்தங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.

அடுத்து இவர்கள் அந்தியூர் பத்திரகாளியம்மன் கோயில், பாரியூர் அம்மன்கோயில் போன்ற கோயில்களுக்குச் சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.

Read more about: actress, chennai, cinema, director, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil