யோகி பாபுவை அடித்தேன்..படம் வெளியாகக்கூடாது என தடுத்தார்.. பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய இயக்குநர்!
சென்னை : யோகி பாபுவை டப்பிங் தியேட்டரில் அடித்தேன் என்று தாதா திரைப்பட இயக்குநர் கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
சின்னச்சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த யோகிபாபு இன்று ரஜினி, அஜித், விஜய் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார்.
சதுரங்கவேட்டை 2, பூச்சாண்டி, சலூன், அயலான், சுந்தரா டிராவல்ஸ் 2, தலைநகரம் 2, வாரிசு, ஜெயிலர், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் என ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் யோகி பாபு
நடிகர் யோகி பாபு தாதா திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும், நான்கே நான்கு சீனில் மட்டும் தான், நான் நடித்துள்ளேன் என்றும், அந்த இயக்குனர் என்னுடைய புகைப்படத்தை போட்டு ஏன் இப்படி செய்தார்? என்று எனக்கு தெரியவில்லை என்று யோகிபாபு கூறி இருக்கிறார்.

யோகிபாபு மீது புகார்
இந்நிலையில், தாதா திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடப்பழனியில் நடைபெற்றது. இதில் பேசிய தாதா திரைப்பட இயக்குநர் கிஷோர். தாதா திரைப்படத்தில் நடிக்கவில்லை என, யோகி பாபு ட்வீட் செய்தாலும், அது குறித்து எந்தவிதமான கவலையும் எனக்கு இல்லை என்றார். தாதா திரைப்படத்தை எந்த தயாரிப்பாளர்களும் வாங்க விடாமல் யோகி பாபு தடுத்ததாகவும், அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் இயக்குநர் கிஷோர் தெரிவித்தார்.

யோகிபாபுவை அடித்தேன்
தொடர்ந்து பேசிய கிஷோர், யோகி பாபு தாதா படத்தில் நடித்திருக்கிறார். டப்பிங் பேச வராததால் எங்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவரை அடித்ததால் பயந்து போய் இந்த படத்துக்கு வந்து டப்பிங் பேசி கொடுத்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அவர் இந்த மாதிரி பொய்களை கூறி வருகிறார் என்றார்.

பொய்யான புகார்
மேலும், துரைராஜன் என்பவர் என்னுடைய படத்தில் எடிட்டராக வேலை செய்தவர். அவர் நான் எடுத்த படத்தை எடிட்டிங் செய்து வைத்து இப்படி எல்லாம் பொய் புகார் அளித்திருக்கிறார் என்று தாதா படத்தின் இயக்குநர் கிஷோர் கூறினார். இயக்குநர் யோகிபாபுவை அடித்ததாக கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











