Don't Miss!
- Sports
தோனி தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் நாடு.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி பேச்சு
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த வதந்தியால் என் வாழ்க்கையே போச்சு.. கங்கனா ரனாவத்துக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல தெரியுமா?
மும்பை: தாம்தூம், தலைவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்க அந்த ஒரு வதந்தி தான் காரணம் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கங்கனா ரனாவத் நடித்துள்ள தாக்கத் எனும் பாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அந்த படத்தின் புரமோஷனுக்காக கலந்து கொண்ட பேட்டியில் தொகுப்பாளர் கேட்ட ஒரு கேள்விக்குத் தான் இப்படியொரு பதிலை நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் குறித்து கேலி பேச்சு … சரியான பதிலடி கொடுத்த கேஜிஎஃப் 2 நடிகை!

35 வயசு ஆகுது
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு தற்போது 35 வயதாகிறது. தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரனாவத். பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக மாறினார். சமீபத்தில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் பயோபிக் படமாக உருவான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக இவர் நடித்திருந்தார்.

தலைவி படம் ஓடல
பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தொடர்ந்து பாலிவுட் திரையுலகை பற்றி அவதூறுகளை பரப்பி வந்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு ரசிகர்களை விட ஹேட்டர்களே அதிகமாக மாறினர். கங்கனா ரனாவத்தின் சர்ச்சை ட்வீட்களை பார்த்து ட்விட்டரும் அவரை அதிரடியாக நீக்கியது. அந்த சூழலில் தலைவி படம் வெளியான நிலையில், தமிழ்நாட்டிலும், பாலிவுட்டிலும் அந்த படம் படு தோல்வியை தழுவியது.

ஆக்ஷன் படம்
அடுத்ததாக கங்கனா ரனாவத் நடிப்பில் Dhaakad எனும் ஆக்ஷன் திரைப்படம் உருவாகி உள்ளது. வரும் மே 20ம் தேதி வெளியாக உள்ள அந்த படத்திற்காக தீவிர புரமோஷனில் களமிறங்கி உள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவரிடம் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு கங்கனா ரனாவத் சொன்ன பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வதந்தி
தாக்கட் படத்தில் 'டாம்பாய்' கதாபாத்திரத்தில் அதிரடியாக நடிச்சிருக்கீங்களே நிஜ வாழ்க்கையிலும் நீங்க இப்படித்தானா என பேட்டி எடுத்தவர் கேட்ட நிலையில், இந்த வதந்தியால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் பசங்களே போட்டு அடிச்சிடுவேன்னு சொல்லியே என் பக்கத்தில் யாரையும் வர விடாமல் செய்து விட்டார்கள் என ஜோக் அடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

திருமண ஆசை
நடிகை கங்கனா ரனாவத் இப்படி சொன்னதுமே அவருடன் இந்த படத்தில் நடித்துள்ள அர்ஜுன் ராம்பால், கங்கனா ரனாவத் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. அவர் ரொம்பவே கடவுள் பக்தி உள்ளவர், கருணை உள்ளம் கொண்டவர், காதல் மனம் கொண்டவர் என வரன் பார்க்கும் வேலையை அந்த நிகழ்ச்சியிலேயே பார்த்து விட்டார். இதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் என்ன திடீர்னு கங்கனா ரனாவத்துக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாக என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

ஹிரித்திக் ரோஷன் விவகாரம்
மேலும், நடிகை கங்கனா ரனாவத்துக்கும் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாக பாலிவுட்டில் ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. க்ரிஷ் 3 படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். "silly ex' என கங்கனா ரனாவத்தே ஹிரித்திக் ரோஷன் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இருவரும் மாற்றி மாற்றி வழக்குகளை போட்டதையெல்லாம் மறக்கமுடியுமா என பாலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.