இதை பார்க்க அம்மா இல்லையே: ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்ட ஸ்ரீதேவியின் மகள்கள்

By Siva

Recommended Video

என் முதல் படத்தை பாக்க ஸ்ரீதேவி இல்லையே என்று அழுத ஜான்வி, குஷி கபூர்

மும்பை: தடக் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அம்மா ஸ்ரீதேவியை நினைத்து ஜான்வியும், குஷியும் கண் கலங்கியுள்ளனர்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி நடித்துள்ள முதல் படமான தடக்கின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ஜான்வி டென்ஷனாக இருந்தார். ஆனால் ஹீரோ இஷான் கட்டாரோ கூலாக இருந்தார்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபர், இளைய மகள் குஷி ஆகியோரும் வந்திருந்தனர்.

ஆதரவு

ஆதரவு

தாயை இழந்து வாடும் ஜான்விக்கு ஆதரவாக கபூர் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தனர். அண்ணன் அர்ஜுன் கபூர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் வர முடியவில்லை. இருப்பினும் தன் ஆதரவு என்றுமே உள்ளதாக ஜான்வியிடம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

குஷி

குஷி

ட்ரெய்லரை பார்த்தவுடன் குஷி அழத் துவங்கிவிட்டார். இந்த நல்ல நேரத்தில் அம்மா இல்லையே என்று அவர் ஃபீல் பண்ணத் துவங்கினார். அதை பார்த்த ஜான்வியும் கண் கலங்கினார்.

குடும்பம்

குடும்பம்

ஸ்ரீதேவியை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தடக் ஷூட்டிங் துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி பட ரிலீஸின் போது இல்லை என்பதை அவரின் மகள்களால் நம்ப முடியவில்லை.

ஜான்வி

ஜான்வி

மராத்தி படமான சாய்ரட்டின் இந்தி ரீமேக் தான் தடக். சாய்ரட் படத்தை பார்த்த ஜான்வி நடித்தால் இது போன்று ஒரு படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக வேண்டும் என்று ஸ்ரீதேவியிடம் தெரிவித்திருந்திருக்கிறார்.

உழைப்பு

உழைப்பு

கடின உழைப்பை என்றுமே கைவிடக் கூடாது என்று அம்மா கூறிய அறிவுரையை பின்பற்றுவதாக ஜான்வி தெரிவித்துள்ளார். தன் மனம் சொல்வதை கேட்டு நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X