சாருஹாஸனை பார்த்து இஞ்சி இடுப்பழகான்னு பாடும் கீர்த்தி சுரேஷ் பாட்டி: கியூட்
சென்னை: தாதா 87 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை பார்த்தால் உங்களால் ரசித்து சிரிக்காமல் இருக்க முடியாது.
கமல் ஹாஸனின் அண்ணன் சாரு ஹாஸன் ஹீரோவாக நடித்துள்ள தாதா 97 படம் வரும் மார்ச் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. சாரு ஹாஸன் தாதாவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார்.

கமல் நடித்த சத்யா படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. அதில் கமலின் தேவர் மகன் படத்தில் வந்த இஞ்சி இடுப்பழகா பாடலுக்கு சாரு ஹாஸன், சாரதா பாட்டி நடித்துள்ளனர்.

சும்மா சொல்லக் கூடாது சாருஹாஸனின் கண்களில் காதலை பார்க்க முடிகிறது. கீர்த்தியின் பாட்டி ரொம்ப கியூட்டாக நடித்துள்ளார். 80 வயதுக்கு மேலும் காதல் இருக்கும் என்பதை அவர்கள் அழகாக நடித்துள்ளனர்.
தாதா 87 ஸ்னீக் பீக் வீடியோ ரொம்ப கியூட்டாக உள்ளது. அதை பார்ப்பவர்களால் சாருஹாஸன் மற்றும் சாரதா பாட்டியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











