ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்..தனலட்சுமி சொன்னது எல்லாமே பொய்.. வம்பிழுக்கும் ரசிகர்கள்!
சென்னை : ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் தனலட்சுமி சொன்னது எல்லாமே பொய் என நெட்டிசன்ஸ் கருத்துக்கூறி வருகின்றனர்.
கதை சொல்லட்டுமா டாஸ்கில் முதல் ஆளாக அசீம் தனது கதையை சொல்லத் தொடங்கினார். நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் ஆனால் என் மனைவி பிரிந்துவிட்டார் என்றார்.
அவர் கதை சொல்லிக்கொண்டு இருக்கு போதே போட்டியாளர்களை பட்டனை அழுத்தி கதையை சொல்லவிடாமல் தடுத்தனர்.

கடந்த சீசன்
கடந்த பிக் பாஸ் சீசன் 5ல் கடந்து வந்த காதையில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது சோக கீதங்களை பாடினர். நமீதா மாரிமுத்து சொன்னக்கதை அனைவரையும் கண்கலங்கவைத்துவிட்டது. அதேபோல, தனது மகனை பிரிந்துவிட்டார்கள் அவனை பார்க்கவேண்டும் என்று தாமரைச் செல்வி கதறி அழுததை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது.

தனலட்சுமியின் கதை
அதேபோல இந்த சீசனிலும், அழுகாச்சி கதை டாஸ்க் ஆரம்பமாகி உள்ளது. இதில் நேற்று தனலட்சுமி தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை கூறினார். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பா எங்களை விட்டுட்டு போய்விட்டார் என்னையும் தம்பியையும் அம்மாத்தான் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள்.

அம்மாவை மிஸ் பண்றேன்
நான் வீயோ எடுப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் என்னை திட்டுவார்கள் ஆனால், என் அம்மா எனக்காக அவங்களிடம் சண்டை போடுவாங்க. என் அம்மாவை நான் நிறைய திட்டி இருக்கிறேன். அது அப்போ தப்புனு எனக்கு தெரியவில்லை ஆனால் இப்போத்தான் அது தப்புனு எனக்கு தெரியுது. அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பிக் பாஸ் வீட்டுக்கு போனா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குனு அம்மா சொன்னாங்க. செயினை விற்று எனக்கு இந்த டிரஸ் எடுத்து கொடுத்தாங்க என்று கண்ணீருடன் கூறினார்.

எல்லாமே பொய்
இந்நிலையில், இணையத்தில் ஒருசில நெட்டிசன்ஸ் தனலட்சுமி சொல்வது எல்லாமே பொய் அவர் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வரவில்லை என கூறி குட்டையை குழப்பி உள்ளனர். அதாவது தனலட்சுமி ரீல்ஸ் வீடியோவில் பணத்தை எரிப்பது, பாலை சாலையில் கொட்டுவது என பணத்தை ஒரு பொருட்டாகவே பார்க்காதவர் இதனால், இவர் சொல்வது எல்லாமே பொய் மக்களிடம் சிம்பந்திக்காக இப்படி பேசியிருப்பதாக கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











