ஜிபி முத்துவிற்கு எதிரான தனலட்சுமி.. தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டாரா.. பரபரக்கும் மீம்ஸ்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
விஜய் டிவியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரதானமான போட்டியாளராக ஜிபி முத்து காணப்படுகிறார். அவரை வைத்து கலாய்ப்பதும், அவரிடம் சண்டை போடுவதுமாக மற்ற போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கி சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தினந்தோறும் விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சிறப்பான பிரமோஷன்கள்
இந்த நிகழ்ச்சி குறித்து கடந்த சில வாரங்களாகவே சிறப்பான ப்ரமோஷன்களை நடிகர் கமல்ஹாசனை வைத்து விஜய் டிவி வெளியிட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியை முந்தைய 5 சீசன்களை போலவே தற்போது கமல்ஹாசன் நடத்தி வருகிறார். துவக்கவிழாவில் அனைத்து போட்டியாளர்களையும் தனக்கே உரிய ஸ்டைலில் இவர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்தடுத்த டாஸ்க்குகள்
கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்த டாஸ்க்குகளை செய்து போட்டியாளர்கள் ரசிர்களை கவர்ந்து வருகின்றனர். 4 குழுக்களாக பிரிந்து டாஸ்க்குகளை செய்து வருகின்றனர். இதனிடையே எலிமினேஷனுக்கான நாமினேஷனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய போட்டியாளர் ஜிபி முத்து
இந்த நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக ஜிபி முத்து மாறியுள்ளார். இவருக்கான ரசிகர்கள் ஆர்மியும் துவங்கியுள்ளனர். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்துவை வைத்து கலாய்ப்பது அவருடன் சண்டையிடுவது என சக போட்டியாளர்கள் அடுத்தடுத்து செய்து வருகின்றனர். இதனால் அவருக்கு ரசிகர்களிடையே மேலும் ஆதரவு பெருகி வருகிறது.

ரசிகர்கள் கோபம்
இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரமோமில் ஜிபி முத்துவிடம் தனலட்சுமி, ஆயிஷா உள்ளிட்டவர்கள் சண்டையிடுவது ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனலட்சுமி ஜிபி முத்துவை அழவைத்தார் என்று அவர் மீது கோபத்துடன் அடுத்தடுத்த கமெண்ட்களையும் மீம்ஸ்களையும் ஜிபி முத்து ஆர்மி செய்து வருகிறது.

அழவைத்த தனலட்சுமி
அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி பழகிவரும் ஜிபி முத்துவை தனலட்சுமி அழவைத்ததை தொடர்ந்து அவர் நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து தனலட்சுமி தன்னுடைய மகள் போன்றவர் என்றும், தன்னை அவர் நடிப்பதாக கூறியது குறித்தும் ஜிபி முத்து வருத்தம் தெரிவித்தார்.

மண்ணை வாரிப்போட்டுக் கொண்ட தனலட்சுமி
இதனிடையே அனைவரின் பேவரைட்டாக காணப்படும் ஜிபி முத்துவை அழவைத்த தனலட்சுமி தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டதாகவும் இதையடுத்து கண்டிப்பாக எலிமினேட் ஆவார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











