வித்தியாசமான காரணம் சொல்லி தியேட்டருக்கு அழைத்த தயாரிப்பாளர்!
சென்னை: பத்திரிகை செய்தியை டேக் செய்து, மிஸ்டர் சந்திரமௌலி படத்தை தியேட்டரில் பாருங்கள் என்று தனஞ்செயன் ட்வீட் செய்துள்ளார்
தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் என்று விஷாலை வைத்து ஹாட்ரிக் படங்களை இயக்கிய இயக்குனர் திருவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மிஸ்டர் சந்திரமௌலி .

இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக், ரெஜினா கசாண்ட்ரா, கார்த்திக், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார், ரிச்சட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரைப்படத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ,ரெஜினாவும் கௌதம் கார்த்திக்கும் கடற்கரையில் உல்லாச நடனம் மேற்கொள்ளும் ஏதேதோ ஆனேனே... என்ற பாடலை வெளியிட்டு சூட்டை கிளப்பினர். அந்த பாடலை பார்த்த ரசிகர்கள், ரெஜினாவிற்காக படம் பார்க்க வேண்டும் என்று மீம்ஸ் போட்டனர்.
இந்த திரைப்படம் கால் டாக்ஸி கலாச்சாரத்தால் ஏற்படும் குற்றச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், சமீபத்தில் பெங்ளூருவில், ஓரு கால்டாக்ஸி ஓட்டுனர் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றபோது சாதூர்யமாக அந்த பெண் தப்பித்ததாக பத்திரிகையில் வந்த செய்தியை டேக் செய்து, இதுபோன்ற சம்பவத்தைத் தான் மிஸ்டர் சந்திரமௌலி படம் பதிவு செய்கிறது, அதனால் திரையரங்கில் படத்தை பாருங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
பத்திரிகை செய்தியை டேக் செய்து படத்தை புரமோட் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டதா என நெட்டிசன்கள் பரிதாபமாக விளக்கம் கேட்கின்றனர்.


Click it and Unblock the Notifications











