கைதியின் வெற்றிக்கு பின்னாடி இப்டி ஒரு சென்டிமென்ட்டா.. அப்போ இனி இதையே பாலோ பண்ணுங்க கார்த்தி!
Recommended Video
சென்னை: நடிகர் கார்த்தி குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஷேர் செய்துள்ள மீம்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தனஞ்ஜெயன். காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமௌலி, கொலைகாரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

தனஞ்ஜெயன் சமீபத்தில் நடிகர் கார்த்தி குறித்து மீம்ஸ் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், எனக்கு வந்த மீம்ஸ்களில் மிகவும் சிறந்த மீம் இது. கார்த்தியை பற்றி உண்மையாக சொல்லியிருக்கிறார். நல்ல கிரியேட்டிவிட்டி மக்களே', என தெரிவித்துள்ளார்.
தனஞ்ஜெயன் பகிர்ந்துள்ள அந்த மீம்ஸில் நடிகர் கார்த்தி ஆக்ரோஷமாக கத்தும் வகையில் வெளியான போஸ்டர்கள் எல்லாம், அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்திவீரன், சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி ஆகிய நான்கு படங்களின் போஸ்டர்களிலும் கார்த்தி ஆக்ரோஷமாக கத்தியபடி இருக்கிறார். எப்போது எல்லாம் கார்த்தி வாயை திறக்கிறாரோ அந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கார்த்தி சாந்தமாக நிற்கும் மெட்ராஸ் பட போஸ்டரை பதிவிட்டு, இந்த படம் எப்படி ஹிட்டானது என ரசிகர்கள் சிலர் கேட்டுள்ளனர். கார்த்தி நெற்றியில் திருநீறு பூசியுள்ளது தான் வெற்றிக்கு காரணம் என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். தனஞ்ஜெயனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் ஒரு விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











