அமலா பாலின் முன்னாள் கணவர்.. ஏஎல் விஜய்க்கு பிறந்த நாள்.. அட்டகாச போட்டோவை போட்டு வாழ்த்திய பிரபலம்!

சென்னை: இயக்குநர் ஏஎல் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை பிரபலமான தனஞ்ஜெயன் அட்டகாசமான போட்டோவை போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏஎல் விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான, ஏஎல் அழகப்பனின் மகன் ஆவார்.

மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தன்னை ஒரு தரமான இயக்குநராக அடையாளப்படுத்திய இயக்குநர் விஜய், விக்ரம், விஜய், பிரபுதேவா என முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியிருக்கிறார்.

முதல் திருமணம்

முதல் திருமணம்

தனது இயக்கத்தில் உருவான தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்த நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் இரண்டு ஆண்டுகளிலேயே அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

அவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். பின்னர் அவரவர் வேலையில் பிஸியாக இருந்து வந்தன. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குநர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்ற பொது மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இயக்குநர் ஏஎல் விஜய்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவரது சகோதரர் உதயா, டிவிட்டரின் நான் பெரியப்பாகிவிட்டேன் என மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனஞ்ஜெயன்

தனஞ்ஜெயன்

இந்லையில் இயக்குநர் ஏஎல் விஜய் இன்று தனது பிறத்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருக்கின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் இயக்குநர் ஏஎல் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.

விரலை பற்றிய குழந்தை

விரலை பற்றிய குழந்தை

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்னுடைய நண்பர் ஏஎல் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள், ஒரு பெருமைக்குரிய ஒரு அப்பா இப்போது.. அவருக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மேலும் ஏஎல் விஜய் தனியாக இருக்கும் போட்டோவையும், விஜயின் குழந்தை அவருடைய விரலை பற்றியிருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X