தனுஷ் பாதிக்கப்பட்டிருக்கிறார்.. அவங்க இருக்கும்வரை இது நடக்கும்.. ஓபனாக பேசிய தயாரிப்பாளர்

சென்னை: தனுஷ் நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியிருக்கும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தபோது தனுஷ் பேசிய விஷயம் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. மேலும் தனது சகோதரி மகனை வைத்து அவர் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும் அந்த லிஸ்ட்டில்தான் சேர்ந்தது. இதனால் ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் அவர். இப்படிப்பட்ட சூழலில்தான் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியிருக்கும் குபேரா திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

குபேரா தனுஷ்: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதிலிருந்தே இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் தனுஷ் இணைந்த படம் தோல்வி. அதன் காரணமாக சேகர் கம்முல்லாவும் தெலுங்கு இயக்குநர்தான்; அதனால் அவரது இயக்கத்தில் நடித்திருக்கும் குபேரா படமும் தோல்வியை சந்திக்குமோ என்ற ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

Dhananjeyan Explains about Dhanush Speech in Kubera Audio Launch
Photo Credit:

பட்டையை கிளப்பிய டீசர்: ஆனால் படத்தின் டீசர் வெளியாகி அந்தப் பேச்சையெல்லாம் அமைதியாக்கிவிட்டது. டீசரை பார்க்கையில் கண்டிப்பாக இந்தப் படம் தரமாக அமையும்; மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி தனுஷுக்கு தமிழில் தரமான கம்பேக்கை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் உருவாகியிருப்பதாக ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். படமானது ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனுஷ் பேச்சு: சூழல் இப்படி இருக்க குபேரா ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சில நாட்கள் முன்பு நடந்தது. அதில் பேசிய தனுஷ், "நான் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவன். என்னைப் பற்றி வதந்திகளை எவ்வளவு பரப்பினாலும் ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியாது" என்றார். ரவி மோகன், அமலா பால் உள்ளிட்டோரின் விவாகரத்து விஷயத்தில் தேவையில்லாமல் தனது பெயரை இழுத்தவர்களுக்குத்தான் தனுஷ் இப்படி ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன.

தனஞ்ஜெயன் பேட்டி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் தனியார் யூடியூப் சேனலுக்கு இதுகுறித்து அளித்த பேட்டியில், "குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தனுஷ் வந்திருந்த லுக் அருமையாக இருந்தது. எந்தப் படத்துக்கு என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஆறு, ஏழு படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் எந்த விஷயம் என்றாலும் தனுஷின் பெயரை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக தனுஷ் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

தரமான பதிலடி: அப்படி தனது பெயரை இழுப்பவர்களுக்கு ஓபனாகவே பதிலடி கொடுத்துவிட்டார் தனுஷ். அவர் எங்கேயோ போய்விட்டார். யூடியூபில் அமர்ந்துகொண்டு தொடர்ந்து நெகட்டிவ்விட்டியை பரப்ப வேண்டும், அடுத்தவர்களை காயப்படுத்த வேண்டும் என்று சுற்றும் ஒரு க்ரூப் இருக்கும்வரை இதுமாதிரி நடந்துகொண்டுதான் இருக்கும். தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கெல்லாம் தனுஷ்தான் காரணம் என சொல்வார்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டி தனுஷ் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X