ஜனநாயகன் 20 நிமிட சீன் கட்டா?.. உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?.. தனஞ்செயன் போட்ட ட்வீட்!

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகப் போகிறது என்றும் தீர்ப்பு ஜனநாயகன் படத்துக்கு சாதகமாக வருகிறது என கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வருவதற்கு முன்பே தவெக தரப்பு சோஷியல் மீடியாவில் விபூதி அடித்தனர். ஆனால், ஒரிஜினல் தீர்ப்பு வேறமாதிரி வந்து ஜனநாயகன் படக்குழுவுக்கு மீண்டும் தலைவலியை உண்டாக்கியது.

தொடர்ந்து நீதிமன்றத்தில் கேவிஎன் தரப்பு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஜனநாயகன் படத்தின் 20 நிமிட காட்சிகளை கட் செய்து கொள்ள தயாரிப்பு நிறுவனம் ஒத்துக் கொண்டதாகவும் பிப்ரவரி 13ம் தேதி ஜனநாயகன் படமே ரிலீஸ் ஆகிவிடும் என மீண்டும் வதந்திகளை சிலர் பரப்ப ஆரம்பித்த நிலையில், விஜய் ரசிகர்களே பலரும் அது உண்மையா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Dhananjeyan slams JanaNayagan 20 minutes edited and submitted to censor rumours

ஆனால், அதெல்லாம் சுத்த ஃபேக் நியூஸ் என தற்போது தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார்.

ஜனநாயகன் இந்த மாதம் ரிலீஸ் ஆகுமா?: ஜனநாயகன் படத்தை சுற்றி நீதிமன்ற வழக்கு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தையும் தணிக்கை குழு நாடியுள்ள நிலையில், இப்போதைக்கு ஜனநாயகன் படத்தின் வழக்கு முடிய வாய்ப்பே இல்லை என்கின்றனர். அதே போல வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு கேவிஎன் நிறுவனமும் தணிக்கை குழு நிர்பந்தனைகளுக்கு கட்டுப்பட முடிவு செய்யவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

20 நிமிட காட்சி வெட்டப்படவில்லை: "#JanaNayagan திரைப்படம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு தணிக்கைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட செய்தி பொய்யானது என மறுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தணிக்கைத் திட்டங்களை இறுதி செய்யவில்லை. படத்தின் எதிர்பார்ப்பைக் கெடுக்கும் நோக்கில் இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றனவா எனக் கேள்வி எழுந்துள்ளது.

தயாரிப்பாளரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எந்தச் செய்தியையும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தணிக்கைச் செயல்முறை நீதிமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. பிப்ரவரியில் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்த விவரங்கள் அதன் பிறகே தெரியவரும்.

#JanaNayagan வெளியீட்டுத் தேதியை பொறுத்து, பல படங்கள் பிப்ரவரியில் ரிலீஸாக காத்திருக்கின்றன. இத்திரைப்படங்கள் பிப்ரவரியிலோ அல்லது 2026 மார்ச்சிலோ வெளிவர, ஒரு முறையான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தயாரிப்பாளர் தனஞ்செயன் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X