தனுஷ், செல்வராகவன் படத்தின் டைட்டில் மாற்றப்படுகிறதா...? எதனால் தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காம்போக்களில் செல்வராகவன்,தனுஷ் காம்போ டாப் லிஸ்டில் உள்ளது.

இவர்களது கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, மயக்கம் என்ன, காதல் கொண்டேன் என அனைத்து படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக உள்ளன.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைய உள்ள நிலையில் அதில் நானும் வருவேன் படத்தின் டைட்டில் மாற்றப்படுகிறது என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

செல்வராகவன் தனுஷ்

செல்வராகவன் தனுஷ்

இயக்குனர் செல்வராகவன் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் இன்றுவரை மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. முன்னணி நடிகர்களுக்கு இணையாக பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இயக்குனர் செல்வராகவன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் தனித்துவமான கதை அம்சத்தில் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது. குறிப்பாக செல்வராகவன் தனுஷ் இணையும் படங்கள் என்றால் அது நிச்சயமாக வெற்றி படமாகத்தான் இருக்கும்.

மிகப்பெரிய குறையாக

மிகப்பெரிய குறையாக

துள்ளுவதோ இளமை தொடங்கி காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தொடர்ந்து இவர்கள் பணியாற்றி அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக இருக்க கடந்த சில காலமாகவே இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருக்க மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

பேய் படமாக

பேய் படமாக

அதன்படி செல்வராகவன்,தனுஷ் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைய உள்ளனர் அதில் ஒன்று ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2. மற்றொரு படத்திற்கு "நானே வருவேன்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காதல் மற்றும் கேங்ஸ்டர் படங்களை இயக்கி வந்த செல்வ ராகவனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான நெஞ்சம் மறப்பதில்லை பேய் படமாக வெளியானது. அதே பாணியில் நானே வருவேன் படமும் பேய் படமாக உருவாக உள்ளது என தெரியவந்துள்ளது.

விரைவில் புது டைட்டிலை

விரைவில் புது டைட்டிலை

நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இயக்குனர் செல்வராகவன் புதிய டைட்டிலை அறிவிப்பார் என கூறப்படுகிறது. நானே வருவேன் டைட்டில் எதனால் மாற்றப்படுகிறது என்பது பற்றிய சரியான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் புது டைட்டிலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X