‘பேட்ட’... இந்த அப்டேட்டை கேட்கும் போதே அதிருதே!
பேட்ட படத்தின் வினியோக உரிமையை இன்னும் யாரும் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: ரஜினியின் பேட்ட படத்தின் வினியோக உரிமையை அதிக தொகைக்கு சன் பிக்சர்ஸிடம் இருந்து வாங்கியதாக வெளியான தகவலை பிரபல தயாரிப்பாளர் தாணு மறுத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. படப்பிடிப்புகள் முடிவடைந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் வினியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தாணு அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இவர் ஏற்கனவே ரஜினியின் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தற்போது இவர் கைவசம் பேட்ட படம் செல்வதன் மூலம் அதன் பிரம்மாண்ட விளம்பரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இது வதந்தி என விளக்கமளித்துள்ளார் தாணு. 'சன் பிக்சர்ஸ் இன்னும் பேட்ட படத்தின் பிசினசை ஆரம்பிக்கவில்லை. அப்படி ஆரம்பிக்கும் போது இது தொடர்பாக பேசலாம். இப்போது நான் அதனை வாங்கியதாக வெளியான தகவல் உண்மையில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கும் அனைத்து படங்களையும் தானே வெளியிடுவது இல்லை. வினியோக உரிமையை மற்ற தயாரிப்பாளர்களிடம் அளித்து வருகிறது. அந்த வகையில் பேட்ட படத்தின் வினியோக உரிமையும் வேறொரு தயாரிப்பாளரிடம் அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











