For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவங்க இல்லையாமே... 'தலைவர் 169'-ஐ இவங்கதான் தயாரிக்கிறாங்களாம்

    By
    |

    சென்னை: ரஜினியின் அடுத்த படத்தை, நடிகர் தனுஷ் தயாரிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில் அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

    Dhanu, Dhanush likely to produce Thalaivar 169

    இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். தலைவர் 168 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் இசை அமைக்கிறார்.

    இதில், காமெடியனாக சூரி நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், முன்னாள் ஹீரோயின்கள் குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் ஐதராபாத், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.

    இதுக்கு அவரே பரவாயில்ல.. விவாகரத்தான நடிகர் மீது க்ரஷ் கொண்ட பிரபல நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்!இதுக்கு அவரே பரவாயில்ல.. விவாகரத்தான நடிகர் மீது க்ரஷ் கொண்ட பிரபல நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்!

    இந்நிலையில், ரஜினியின் 169 வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ்.தாணு இணை தயாரிப்பு செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    Sources said that Acror Dhanush's wunderbar films to produce Talaivar 169 and kalaipuli S.Thaanu is expected to co-produce it. Speculations are rife before that, this movie will backrolled by Vels film international.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X