“தனுஷோட நடிப்பு வேற லெவல் தான், ஆனா…?: தெறிக்கவிடும் பிரபல பாலிவுட் நடிகையின் வீடியோ!
மும்பை: சஃயிப் அலிகானின் மனைவியான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Recommended Video
அமீர் கானுடன் கரீனா கபூர் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் அடுத்த வாரம் வெளியாகிறது.
இந்நிலையில், அவர் தனுஷின் நடிப்பு குறித்து அவர் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் லேடி டான்
பாலிவுட்டில் கரீனா கபூர் என்ற பெயர் காந்தம் மாதிரி, முன்னணி நடிகர்களையும் ரசிகர்களையும் அப்படியே இழுத்துவிடும். கரீனாவின் கூர்மையான கண்களுக்கும், அவரது நடிப்புக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதைவிடவும் அவரது கவர்ச்சியில் மில்லி மீட்டர் அளவை கூட ரசிகர்கள் மிஸ் செய்ய விரும்ப மாட்டார்கள். கரீனா கபூர் திரையில் தோன்றிவிட்டால், டான் போன்று எதிரில் இருப்பவர்களை மொத்தமாக சூறையாடிவிடுவார்.

சஃயிப் அலிகானின் 50கேஜி தாஜ்மஹால்
சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் என இந்தியில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கரீனா கபூர், திருமண வாழ்வில் சஃயிப் அலிகானிடம் சரணடைந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன சஃயிப் அலிகானுக்கு, கரீனா கபூர் தான் 50கேஜி தாஜ்மஹாலாகிப் போனார். நட்சத்திரத் தம்பதிகளாக இருவரும், தொடர்ந்து பாலிவுட்டை பதம் பார்த்து வருகின்றனர்.

தனுஷ் - சாரா அலிகான்
ஆனந்த் எல். ராய் இயக்கிய ‘ராஞ்சனா' படம் மூலம் இந்தியில் எண்ட்ரியான தனுஷ், மீண்டும் அவரது இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சாரா அலிகான் நாயகியாகவும், அக்சய் குமார் இன்னொரு ஹீரோவாகவும் நடித்திருந்தார், ஏ.அர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். சஃயிப் அலிகானின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் இந்த சாரா அலிகான். சமீபத்தில் கூட தனுஷும் சாரா அலிகானும் ஒன்றாக பார்ட்டிக்கு சென்ற போட்டோ வைரலானது.

தனுஷ் குறித்து கரீனா கபூர்
இந்நிலையில், தனுஷின் நடிப்பு குறித்து கரீனா கபூர் பேசிய வீடியோவும் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது. அந்த வீடியோவில், "தனுஷ் மிகச் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை" என கரீனா கபூர் கூறியுள்ளார். மேலும், "ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், தனுஷின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும், அது எனக்கு ரொம்பவே பிரமிப்பாக இருப்பதாகவும்" பேசியுள்ளார். இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











