64 நாட்கள் உல்லாசமாய் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பியது தனுஷ் 40 படக்குழு

சென்னை : சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் 100 கோடியை தாண்டியது என தயாரிப்பாளர் எஸ்.தானு தரப்பில் இருந்து தெரிவிக்க பட்டது. படத்தில் தனுஷ் ,மஞ்சு வாரியர்,பசுபதி,அபிராமி, பிரகாஷ் ராஜ், டீஜே, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .

அதனை தொடர்ந்து தற்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அசுரன் பட ரிலீஸ் சமயத்தில் தனுஷ் லண்டனில் தனது படக்குழுவுடன் அசுரன் படத்தை பார்த்தார் . சுமாராக 64 நாட்கள் லண்டனில் நடந்து வந்த சூட்டிங் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது .

Dhanush 40 shooting in London is finished

இதனை தயாரிப்பாளரான சசிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜுடன் சசிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவேற்றி படப்பிடிப்பு நிறைவுபெற்ற இந்த செய்தியையும் கூறியுள்ளார். மிக நீண்ட ,கடினமான மற்றும் மகிழ்ச்சி நிறைந்து 64 நாட்களாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றிருக்கிறது என்று கூறினார்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் ஒரு சிறந்த தயாரிப்பாளர் . அவர் பல நல்ல படங்களை தயாரித்துள்ளார் .2010ல் தமிழ் படம் மூலம் தயாரிப்பை துவங்கிய ஒய் நாட் ஸ்டூடியோஸ் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் , காவிய தலைவன், இறுதிச்சுற்று , விக்ரம் வேதா , தமிழ் படம் 2, கேம் ஓவர் படங்கள் வரை தயாரித்து உள்ளனர் .

மேலும் தனுஷ் 40,பின் யோகி பாபுவின் 'மண்டேலா' ,சமுத்திரகனியின் 'ஆலே' படங்களை தயாரித்து வரும் சசிகாந்த். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். தனுஷ் தனதுநடிப்பு திறமையை மேலும் மேலும் மெருகேற்றிவருகிறார். அவரின் இந்த திறமை நிச்சயம் இந்த படத்திலும் வெளிவந்திருக்கும். எப்போதுமே தனுஷ் படங்களுக்கு வரவேற்பு இருக்கும் ஆனால் அசுரன் ரிலீஸ்க்கு பிறகு இந்த ஆர்வம் பல மடங்கு உயர்ந்துள்ளனது என்றால் அது மிகையல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X