தனுஷ் 41 ரெடி.. செல்வராகவன் உடன் மீண்டும் சேர்ந்த தனுஷ்.. என்ன கதை? யார் மியூசிக் தெரியுமா?

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை: நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் சில ஜோடிகள் பலருக்கும் பிடித்தமானது. சூர்யா கவுதம் மேனன் இணை, விஜய் ஏ ஆர் முருகதாஸ் ஜோடி, அஜித் விஷ்ணுவர்தன் ஜோடி என்று ஹிட் படங்களை கொடுக்கும் ஜோடிகள் நிறைய இருக்கிறது.

அப்படி ஒரு இணைதான் நடிகர் தனுஷ் மற்றும் அவரின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இணை. இவர்களின் படங்கள் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஆதர்சமான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்த இணை மூலம் உருவான புதுப்பேட்டை, மயக்கம் என்ன, காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை அனைத்தும் ஹிட் அடித்தது. அதிலும் காதல் கொண்டேன் படம் தனுஷிற்கு பெரிய ஹிட் கொடுத்தது. மேலும் புதுப்பேட்டை படம் இப்போது தனுஷிற்கு மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

அதன்பின் இல்லை

அதன்பின் இல்லை

ஆனால் மயக்கம் என்ன படத்திற்கு பின் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து படம் எடுக்கவில்லை. தனுஷ் வெற்றிமாறன் படங்களில் பிஸியாகிவிட்டார். அதேபோல் செல்வராகவன் வேறு வேறு ஹீரோக்களுடன் படம் எடுக்க தொடங்கிட்டார்.

மீண்டும் சேர்க்கிறார்கள்

மீண்டும் சேர்க்கிறார்கள்

இந்த நிலையில் மீண்டும் செல்வராகவன் தனுஷ் ஜோடி இணைகிறது. தனுஷின் 41வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார்.

மூன்றாவது படம்

மூன்றாவது படம்

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். முதலில் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இசை அமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வேறு என்ன

வேறு என்ன

இந்த படம் ரொமான்டிக் திரில்லர் படம் என்று கூறப்படுகிறது. கதை முழுக்க திருநெல்வேலி பகுதியில் நடக்கும். தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் படமும் திருநெல்வேலியில்தான் பட பிடிப்பு தொடங்க உள்ளது. இரண்டு பட பிடிப்பும் ஒன்றாக நடக்கும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X