Raayan: ராயன் கதை அழுத்தமா இல்ல.. கோட்டை விட்ட தனுஷ்.. செய்யாறு பாலு விமர்சனம்!
சென்னை: ராயன் தனுஷின் 50வது படம் என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், சிறு வயதிலேயே அம்மா, அப்பாவை இழந்த தனுஷ், அண்ணன் தம்பியோடு, தங்கையோடு வாழ்ந்து வருகிறார். தங்கை பிறந்ததுமே பெற்றோர் இறந்துவிட, பிழைப்பை தேடி தனுஷ் சென்னை வருகிறார். சென்னை வந்த அவர்களது குடும்பம் இரண்டு கேங்ஸ்டரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் ராயன் படத்தின் கதை. கதையாக கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் படமாக பார்க்கும் போது தனுஷ் எதையோ கோட்டைவிட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

செய்யாறு பாலு: ஒரு வில்லன் பருத்தி வீரன் சரவணன் மற்றொரு வில்லன் எஸ்.ஜே. சூர்யா இரண்டு பேரும் இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார்கள். இந்த இரண்டு கேங்ஸ்டரையும் பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். இந்த இரண்டு கேங்ஸ்டருக்கும் தனுஷூக்கு என்ன பிரச்சனை என்பது போலத்தான் முதல் பாதி சென்றது. இதனால் இரண்டாம் பாதியில் பெரும் சம்பவம் இருக்கும் என்று பார்த்தால், அடிதடி,ரத்தம், குத்து, சண்டை என படம் செல்கிறது.
மிகப்பெரிய மைனஸ்: ராயன் படம் நல்லப்படமாக வரவேண்டும், இந்த காட்சியை இப்படி செய்ய வேண்டும், இந்த இடத்தில் டயலாக் இப்படி இருக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் தனுஷ் இருந்ததால், இவரின் கதாபாத்திரம், மற்றவர்களின் ரோல் போன்றவை படத்தில் மிஸ்ஸாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வில்லனாக இருந்த போதும், அவர்களின் கதாபாத்திரம் அழுத்தமாக சொல்லப்படவில்லை. அது மட்டுமில்லாமல் படத்தின் அடுத்த காட்சி என்ன என்பது யூகிக்க முடிந்தது படத்தின் மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது.
மிகப்பெரிய பலம்: இந்த படத்தை பார்க்கும் போது ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தின் கதை வருகிறது. பின் ட்ராக் மாறி துரோகம், துரோகத்தால் நடக்கும் கொலைகள், அந்த கொலைக்கான காரணத்தை தெளிவாக சொல்ல தனுஷ் தவறிவிட்டார். அதை சரியாக சொல்லி இருந்தால், படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து இருக்கும். இதையெல்லாம் தாண்டி படத்தை தோளில் சுமந்து இருக்கிறார் ஏஆர் ரஹ்மான், இப்படத்தில் வரும் உசுரே நீ என்ற பாடல் மிகவும் அருமையாக இருக்கு, தனுஷூற்காக ராயன் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











