Raayan Audio Launch:விஜய் ரசிகர்களை ஓவர்டேக் செய்த தனுஷ் ரசிகர்கள்.. இணையத்தில் தீயாக பரவும் செய்தி!
சென்னை: ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தனுஷ் அரங்கத்திற்கு வந்தபோது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இது விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது வருகை தந்தபோது விஜய் ரசிகர்கள் எழுப்பிய ஆரவத்தைவிடவும் அதிகம் என எக்ஸ் பக்கத்தில் ரசிகர்கள் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி, இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார்.

இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்தது.

நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா,பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.

அதேபோல் இசைவெளியீட்டிற்கு முன்னர் வெளியான அடங்காத அசுரன் பாடலும் வாட்டர் பாக்கெட் பாடலும் ராயன் ரம்பல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. கானா பாடல் வடிவில் இந்த பாடல் அமைந்ததால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்தது. இசை வெளியீட்டு விழாவின் போது அடங்காத அசுரன் பாடலை தனுஷ் மற்றும் ரகுமான் பாடினார்கள். இது தொடர்பன வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

கேங்ஸ்டர் படம்: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க பக்கா கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராயன் படம் தனுஷின் 50வது படம் என்பதால் அந்த படத்தினை தானே கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் தனுஷ். இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ்.ஜே. சூர்யா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலஷ்மி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழா: ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இதனாலே படத்தில் நடிப்பு அசுரன் தனுஷ், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களையும் வெளியிட்டனர்.
ஆரவாரம்: இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் அரங்கத்திற்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தினால் ஏற்பட்ட சத்தம் என்பது, 111 டெசிபல் அளவிற்கு பதிவானதாக ரசிகர்கள் இணையத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் வந்தபோது ரசிகர்கள் ஆரவாரத்தினால் பதிவான 103 டெசிபல் சத்ததைவிடவும் அதிகம் என இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











