Raayan: உசுரே நீதானே நீ தானே! தனுஷ் ரசிகர்களே தயாரா? ராயன் இசை வெளியீட்டு விழா டெலிகாஸ்ட்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். தனுஷின் 50வது படமான இந்தப் படத்தினை இயக்குநர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளது என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா சன் டீவியில் இன்று அதாவது ஜூலை 21ஆம் தேதி ஒளிபரப்பப்படுகின்றது.

ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் அடங்காத அசுரன் என்ற பாடலை படக்குழு தரப்பில் இருந்து முதலில் ரிலீஸ் செய்தனர். இந்த பாடலை தனுஷ் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் இன்று வரை இணையத்தில் டாப் லிஸ்ட்டில் உள்ளது. அதேபோல் கானா பாடல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் பாக்கெட் பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Dhanush Raayan Audio Lunch

பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு எழுதி பாடியுள்ள ராயன் ரம்பில் பாடலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஓடாதடா ஓடாதடா பாடலும் ஓ ராயா எனும் பாடலும் இடம் பெற்றுள்ளது. படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ட்ரைலர்: படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஐந்து நாட்களுக்கு முன்னர் ரிலீஸான இந்த ட்ரைலரை இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோர் யூடியூப் தளத்தில் பார்த்துள்ளனர். இந்த 12 மில்லியன் பார்வையாளர்களும் தமிழில் வெளியிடப்பட்ட டீசரைப் பார்த்தவர்கள்தான். இவர்கள் இல்லாமல் தெலுங்கிலும் ஹிந்தியிலும் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதிலும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் ட்ரைலரைப் பார்த்துள்ளனர்.

Dhanush Raayan Audio Lunch

திருப்தியில் கலாநிதிமாறன்: ராயன் படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க பக்கா கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை சென்சார் தரப்பில் இருந்து ஏ சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு வந்தால் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் படத்தினை பார்த்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், படத்தில் இருந்து ஒரு ஃபிரேமைக் கூட குறைக்க கூடாது என முடிவெடுத்துவிட்டார் எனவும் படம் ஏ சர்டிஃபிகேட்டுடன் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியானது.

சன் டீவியில்: ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இதனாலே படத்தில் நடிப்பு அசுரன் தனுஷ், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவை சன் டீவியில் இன்று அதாவது வரும் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்படும் என சன் டீவி தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டீவியில் ஒளிபரப்பபடவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X