Raayan Audio Lunch: வெறித்தனமாக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்! இன்று ராயன் இசை வெளியீட்டு விழா

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி, இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஃபீல் குட் மூவி என சான்றளிக்கப்பட்டது. தனுஷ் தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்தது.

நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா,பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இதுவரை படத்தில் இருந்து மூன்று பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நேற்று அதாவது ஜூலை 5ஆம் தேதி வெளியிடப்பட்ட பாடலான, ராயன் ரம்பல் பாடலை அறிவு பாடியுள்ளார். இந்த பாடல் கிட்டத்தட்ட ராயன் படத்துக்கான தீம் பாடல் போல் அமைக்கப்பட்டுள்ளது.

Dhanush

அதேபோல் இதற்கு முன்னர் வெளியான அடங்காத அசுரன் பாடலும் வாட்டர் பாக்கெட் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. கானா பாடல் வடிவில் இந்த பாடல் அமைந்ததால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்தது.

Dhanush

கேப்டன் மில்லர்: கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான படம் கேப்டன் மில்லர். இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் மாபெரும் வெற்றிப் படமாக மாறவில்லை. அதேநேரத்தில் தோல்விப் படமாகவும் மாறவில்லை. அண்மையில் லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுப்படம் என்ற விருதினை வென்றது. மேலும் கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தினையும் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இளையாராஜாவே இசை அமைக்கின்றார்.

Dhanush

கேங்ஸ்டர் படம்: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க பக்கா கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராயன் படம் தனுஷின் 50வது படம் என்பதால் அந்த படத்தினை தானே கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் தனுஷ். இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ்.ஜே. சூர்யா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலஷ்மி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Dhanush

இசை வெளியீட்டு விழா: ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இதனாலே படத்தில் நடிப்பு அசுரன் தனுஷ், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இவர்கள் இருவருக்கும் ரகுமான் என்ன மாதிரியான பேக் கிரவுண்ட் மியூசிக் போட்டுள்ளார் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தனுஷ் ரசிகர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கிச் சென்றுகொண்டு உள்ளனர்.

Dhanush

More from Filmibeat

Read more about: dhanush ராயன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X