தனுஷ் 50க்காக இறங்கி குத்திய இசைப்புயல்! ராயன் ஆடியோ லாஞ்ச் டீவியில் டெலிகாஸ்ட்! எப்போதுனு தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் பல் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். குறிப்பாக பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழா தொலைகாட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவல் இப்போது படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது அறிமுக காலகட்டங்களில் மிகுந்த உருவக்கேலிக்கு ஆளான நடிகர்களில் தனுஷும் ஒருவர். தன்மீது வீசப்பட்ட மிகவும் தவறான, அவமரியதையான மற்றும் கொச்சையான விமர்சங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி இன்று தமிழ் சினிமாவின் அடையாள முகங்களில் ஒன்றாக மாறியுள்ளார் தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து தனது கொடையை நாட்டி வருகின்றார். தான் நடிக்கும் சினிமாக்களில் தனது நடிப்புக் தீனி போடும் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், அதேநேரத்தில் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படங்களில் நடித்து தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது குட்டி ட்ரீட் கொடுத்தும் வருகின்றார்.

கடையாக இவரது நடிப்பில் வெளியான படம் கேப்டன் மில்லர். இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் மாபெரும் வெற்றிப் படமாக மாறவில்லை. அதேநேரத்தில் தோல்விப் படமாகவும் மாறவில்லை. மேலும் கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தனுஷ் நடிக்கவுள்ள இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தினையும் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இளையாராஜாவே இசை அமைக்கின்றார்.
கேங்ஸ்டர் படம்: தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ராயன். முழுக்க முழுக்க பக்கா கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராயன் படம் தனுஷின் 50வது படம் என்பதால் அந்த படத்தினை தானே கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் தனுஷ். இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ்.ஜே. சூர்யா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலஷ்மி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசைப்புயல்: ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இதனாலே படத்தில் நடிப்பு அசுரன் தனுஷ், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இவர்கள் இருவருக்கும் ரகுமான் என்ன மாதிரியான பேக் கிரவுண்ட் மியூசிக் போட்டுள்ளார் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.

சன் டீ.வியில்: படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்கனவே நடைபெற்று பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைகாட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் டீவியில் வரும் 6ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் ஒளிபரப்புச் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர்.



Click it and Unblock the Notifications











