ரிலீஸ் ஆனது தனுஷின் 50வது படம் ராயன்! சூர்யா, அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ளா ராயன் படத்திற்காக தனுஷ்க்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Raayan Dhanush Surya

சூர்யா வாழ்த்து: இதையடுத்து படத்திற்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. முன் பதிவிலேயே படம் எதிர்பார்த்ததை விடவும் வசூல் அதிகமாகக் குவித்துள்ளது. இந்நிலையில் படம் இன்று வெளியாகின்றது. இதனால் திரைத்துறையினர் பலர் தனுஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், " தனுஷின் 50வது படத்திற்கு வாழ்த்துகள். சினிமா மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கும் நீங்கள் செலுத்தும் அயராத உழைப்பிற்கும் ராயன் படம் பிரமாண்டமான வெற்றி அடைய வாழ்த்துகள். ராயன் படக்குழுவினருக்கும் நல்வாழ்த்துகள். படத்தை அனைவரும் தியேட்டரில் பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Raayan Dhanush Surya

கார்த்தி & அனிருத்: அதேபோல் நடிகர் கார்த்தி, " தனுஷின் 50வது படமான ராயன் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள். சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்திற்கும் அதற்காக தனுஷ் செலுத்தும் உழைப்பிற்கும் படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள். படம் வெற்றி பெற ராயன் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார். தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி படத்திற்கு இசை அமைத்த அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், " வாழ்த்துகள் தனுஷ் சகோதரா, ராயன்" என குறிப்பிட்டு இரண்டு கோப்பைகள் மற்றும் மூன்று நெருப்பு எமோஜிகளை பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜா: இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில், " தனுஷின் 50வது படத்திற்கு வாழ்த்துகள். சினிமா மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கும் நீங்கள் செலுத்தும் அயராத உழைப்பிற்கும் ராயன் படம் பிரமாண்டமான வெற்றி அடைய வாழ்த்துகள் என பதிவிட்டது மட்டும் இல்லாமல் தனுஷ் தன்னுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Raayan Dhanush Surya

நாக வம்சி & பாலாஜி மோகன்: அதேபோல் தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில், " ராயன் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தனுஷ் தனது 50வது படமாக ஒரு மைல்கல்லாக உருவாக்கியுள்ள ராயன் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். அதேபோல் தனுஷின் மாரி படத்தினை இயக்கிய பாலாஜி மோகன் தனது எக்ஸ் பக்கத்தில், " உங்களின் 50வது படத்திற்கு வாழ்த்துகள் தனுஷ் சார். உங்களுடைய 50 படங்களில் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு நன்றி. உங்களின் அடுத்த 50 படங்கள் உங்களை மேலும் மேலும் உயர்த்தவும் வாழ்வில் நல்ல திருப்பங்களைக் கொடுக்கவும் வாழ்த்துகள். எங்களைத் தொடர்ந்து மகிழ்வியுங்கள் தனுஷ் சார்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X