Raayan Twitter Review: செல்வராகவனையே ஓவர் டேக் செஞ்சுட்டாரு! ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ளா ராயன் படத்திற்காக தனுஷ்க்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Raayan Dhanush

இந்நிலையில் படத்தினை அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் இடைவெளிக் காட்சி சிறப்பாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கதை இதுவா?: மூன்று சகோதாரர்கள் சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் இல்லாமல் இருக்கின்றனர். மூவரும் ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றனர். இதில் இருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பதுதான் படமாக எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்களில் ஒருவர், " தனுஷ் ஒரு இயக்குநரா அண்ணன் செல்வராகவன் மாதிரி படம் எடுபாருன்னு நெனச்சு தான் தியேட்டர் போனேன், ஆனா அவரோட குரு வெற்றிமாறன் மாதிரி எடுத்து வச்சிருக்காரு" என பதிவிட்டுள்ளார்.

பெஸ்ட் இன்டர்வெல்: மற்றொரு ரசிகரோ படத்தின் இடைவேளைக் காட்சி குறித்து, "இந்த சீன்லாம் தரம் செதுக்கி வெச்சிருக்காங்க தனுஷ் கரீயர்லயே ஒன் ஆப் தி பெஸ்ட் இன்டர்வெல் பிளாக்னு தா சொல்லனும்" என பதிவிட்டுள்ளார். இன்னொரு ரசிகர், " படம் எடுக்க சொன்னா தனுஷ் பட்டைய கௌப்பி இருக்காரு, இன்னும் என்னன்னா திறமைதான்யா உனக்குள்ள வச்சிருக்க இதே வேகத்துல போ தலைவா.." என பதிவிட்டுள்ளார். அதேபோல் படத்தின் இன்னொரு பலம் படத்தின் இசைதான் எனவும் ரசிகர்கள் படத்தினை புகழ்ந்து வருகின்றனர்.

Raayan Dhanush

எஸ்.ஜே. சூர்யா: அதேபோல் ரசிகர் ஒருவர் படத்தின் முதல் பாதி குறித்து கொஞ்சம் விளக்கமாகவே தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் படத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தனுஷின் கதாபாத்திரத்திற்கு இணையாக சந்தீப் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இடைவேளைக் காட்சி புல்லரிக்க வைக்கின்றது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X