Raayan Box Office: வசூலின் உச்சத்தில் ராயன்! பிறந்த நாள் பரிசாக கோடிகளை வாரிக் கொடுக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை இயக்கும் பொறுப்பை மற்ற இயக்குநர்களுக்கு வழங்கி, கட்டயாம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தாமல், தானே இயக்கியுள்ளார். தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றது. இதில் முதல் இரண்டு நாளில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது. படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளது.

Raayan Dhanush

நடிகர் தனுஷ் இயக்குநராக மாபெரும் வெற்றியைப் பெறப்போகின்றார் என்பதற்கு இந்த படம் காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் படம் ரூபாய் 100 கோடிகள் வசூலைப் படைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ரூபாய் 100 கோடிகளை ராயன் படம் வசூல் செய்தால், தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொள்வார் தனுஷ்.

ஹாலிவுட் படம்: படத்தின் முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. அதேபோல், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து மிரளவைத்துள்ளார் தனுஷ். இதுமட்டும் இல்லாமல், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயும் இரவிலேயுமே காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படம் பார்த்த எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Raayan Dhanush

இரண்டு நாள் வசூல்: படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம். முதல் நாளில் ராயன் படம் அனைத்து மொழிகளிலும் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 13.65 கோடிகளை வசூல் செய்துள்ளது என கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளில் முதல் நாளை விடவும் அதிகமாக ரூபாய் 20 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. அதாவது இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் என கிட்டத்தட்ட ரூபாய் 13 கோடியே 85 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிறந்த நாள் பரிசு: இதனால் ராயன் படம் முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ரூபாய் 27.5 கோடிகளை வசூல் செய்துள்ளது என திரைப்படங்களில் பாக்ஸ் ஆஃபீஸ் கணக்குகளை அளவிடும் வலைதளங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் படம் கிட்டத்தட்ட ரூபாய் 30 கோடிகளை முதல் இரண்டு நாட்களிலேயே வசூல் செய்துள்ளதால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது. இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடும் தனுஷ்க்கு ராயன் படத்தின் வசூல் பிறந்த நாள் பரிசாக பார்க்கப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X