Raayan Box Office: காத்து வாங்கும் காட்சிகள்.. வசூலில் சொதப்பும் ராயன்.. ஏமாற்றத்தில் படக்குழு!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தில் அதிகப்படியான வெட்டு, குத்து, ரத்தம் என இருந்தாலும் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ராயன் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகின்றது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது. படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளது.

Raayan Dhanush

நடிகர் தனுஷ் இயக்குநராக மாபெரும் வெற்றியைப் பெறப்போகின்றார் என்பதற்கு இந்த படம் காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் படம் ரூபாய் 100 கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூபாய் 100 கோடிகளை ராயன் படம் வசூல் செய்தால், தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொள்வார் தனுஷ்.

Raayan Dhanush

ஹாலிவுட் படம்: படத்தின் முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. அதேபோல், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து மிரளவைத்துள்ளார் தனுஷ். இதுமட்டும் இல்லாமல், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயும் இரவிலேயுமே காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படம் பார்த்த எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Raayan Dhanush

வசூல் விபரம்: படம் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றது. படத்தின் முதல் ஆறு நாட்கள் வசூல் விபரம் குறித்து பார்க்கலாம். முதல் நாளில் படம் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில், ரூபாய் 13.65 கோடிகளும், இரண்டாம் நாளில் ரூபாய் 13.75 கோடிகளும் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியானது. அதேபோல் மூன்றாவது நாளில் ரூபாய் 15.25 கோடிகளும் வசூல் செய்துள்ளது எனவும் நான்காவது நாளில் படம் ரூபாய் 5.8 கோடிகளும் ஐந்தாவது நாளில் ரூபாய் 4.55 கோடிகளும் ஆறாவது நாளில் கிட்டத்தட்ட 4 கோடிகளும் வசூல் செய்திருக்கும் என யூகக் கணக்கின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கோடி வசூல்?: இதனால் படம் கிட்டத்தட்ட முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட ரூபாய் 57 கோடிகளை வசூல் செய்துள்ளது. படத்தின் வசூல் வார இறுதி நாட்களில் நாளுக்கு நாள் அதிக வசூல் குவித்தது. ஆனால் திங்கட்கிழமை முதல் தொடர்ந்து படம் வசூலில் மிகவும் குறைவாகவே வசூல் செய்து வருகின்றது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ராயன் படம் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்யும் என நம்பிக்கையில் இருந்தாலும், ஆடியன்ஸ் எண்ணிக்கை குறைந்து விட்டதால் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X