Dhanush 51 - தனுஷ் 50ஐ விடுங்க.. தனுஷ் 51 ஷூட்டிங் எப்போது தெரியுமா?.. அசத்தல் அப்டேட் உள்ளே..!
சென்னை: Dhanush 51 Update (தனுஷ் 51 அப்டேட்) தனுஷ் நடிக்கவிருக்கும் 51ஆவது படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தலாம் என்ற தனுஷின் ஆசை நிராசை ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லரில் நடித்து முடித்திருக்கிறார்.

கேப்டன் மில்லர்: தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன். அவரது இயக்கத்தில் கேப்டன் மில்லர் உருவாகியிருப்பதால் நிச்சயம் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி கவனம் ஈர்க்கும் என்று தனுஷும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். படமானது டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் 50: இந்தச் சூழலில் சமீபத்தில் தனுஷின் 50ஆவது படம் குறித்த அப்டேட் தெரியவந்தது. அதன்படி படத்தை அவரே இயக்கவிருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அப்படத்துக்கு ராயன் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கிய பவர்பாண்டி படம் பலத்த வரவேற்பைப் பெற்றதால் நிச்சயம் இந்தப் படமும் அருமையாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர்.
படத்தில் யார் யார்: தனுஷ் படத்தை இயக்குவதால் நிச்சயம் அந்தப் படத்துக்கு ஸ்டார் வேல்யூ கூடும் என்றே கருதப்படுகிறது. அதன்படி படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.அவரைத் தவிர்த்து சந்தீப் கிஷன்,துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
தனுஷ் 51: இதற்கிடையே தனுஷ் தனது 51ஆவது படத்தில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க நாகார்ஜுனா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது, மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கும், ஹிந்தியில் உருவாகவிருக்கிறதாம். இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதத்தில் தொடங்கலாம் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











