தனுஷின் இட்லி கடை.. வெளியானது சூப்பர் அப்டேட்.. செம ஃபார்மில் இருக்கார் நடிப்பு அசுரன்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்தச் சூழலில் தனுஷின் 52ஆவது படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தார். முக்கியமாக அவரது உருவத்தை வைத்து பலரும் கேலி செய்தார்கள். ஆனால் வெல்வதற்கு அழகைவிடவும் திறமை அதீத முக்கியம் என்பதை உணர்ந்து தனது திறமையை வளர்த்து இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். முக்கியமாக நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, திரைப்படங்கள் தயாரிப்பது என பல ப்ளாட்பார்ம்களில் ஜொலிக்கிறார் அவர்.

raayan kubera

ராயன்: நடிகராக கலக்கிவந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அரத பழசான கதையை சுமாரான திரைக்கதையுடன் பட்டி டிங்கரிங் பார்த்து கொடுத்ததால்தான் படம் படுத்துவிட்டது என்று ரசிகர்கள் கூறினார்கள்.

குபேரா: ராயன் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். வாத்தி படத்தை வைத்து தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த அவருக்கு அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. எனவே குபேரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இதற்கிடையே ராயன் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோதே அடுத்த படத்தின் இயக்க வேலைகளிலும் இறங்கினார் தனுஷ். அதன்படி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தனுஷின் உறவினர், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அண்மையில்கூட படத்திலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் யூட்யூப் வியூஸ்களில் சக்கைப்போடு போட்டது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

அடுத்த படம்: இந்நிலையில் தனுஷின் 52ஆவது படத்ம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் படத்தை DAWN Pictures தயாரிக்கிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு இட்லி கடை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை தனுஷே இயக்குகிறார்; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் படத்தில் பணியாற்றும் இதர கலைஞர்கள் குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற படங்கள்: இந்தப் படம் தவிர்த்து தனுஷிடம் இளையராஜாவின் பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. தனுஷின் இந்த லைன் அப்பை பார்த்த ரசிகர்கள் அடடா நடிப்பு அசுரன் தனுஷ் ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் இயக்கம் என படு பிஸியாக இருக்கிறாரே. கண்டிப்பாக தங்களுக்கு செமத்தியான ட்ரீட் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Read more about: raayan kubera குபேரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X