தனுஷ் 56: 'கர்ணன்' கூட்டணி மீண்டும் இணையப்போறாங்க! மாரி செல்வராஜ் வெளியிட்ட 'பேண்டஸி' ரகசியம்!

சென்னை: தமிழ் சினிமாவில் 'கர்ணன்' எனும் காவியத்தைக் கொடுத்த தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணையப்போகும் செய்தி ஏற்கனவே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது. தற்போது 'தனுஷ் 56' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படம் குறித்த அதிரடித் தகவலை இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

காந்தாரா படத்தை போல பீரியட் படத்தை உருவாக்க வேண்டும் என மோகன். ஜி திரெளபதி 2 படத்தை இயக்கினார். ஆனால், 10 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 1 கோடி கூட வசூல் செய்ய முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.

Dhanush 56 Update Mari Selvaraj Reveals Period Fantasy Script Details After Karnan Success

இந்நிலையில், சாதியக் கொடுமைகளால் ஒடுக்கப்படும் மக்களின் வலியை படமாக்கி வரும் மாரி செல்வராஜ் பீரியட் ஃபேண்டஸி படத்தை தனுஷை வைத்து இயக்க முடிவு செய்துள்ளாராம். மேலும், பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகப் போகிறது.

இதுவரை பார்த்திராத புதிய ஜானர்:

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், மாரி செல்வராஜின் முந்தைய படங்களான 'பரியேறும் பெருமாள்', 'மாமன்னன்', 'வாழை' ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது குறித்து அவர் கூறுகையில், "இது ஒரு பீரியட் (Period), பேண்டஸி (Fantasy) மற்றும் அரசியல் கலந்த கதைக்களம். நான் இதுவரை முயற்சி செய்யாத ஒரு புதிய உலகத்தை இதில் உருவாக்கப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Dhanush 56 Update Mari Selvaraj Reveals Period Fantasy Script Details After Karnan Success

பேண்டஸி உலகில் அரசியல்?

முழுக்க முழுக்க பேண்டஸி படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், படத்தில் மாயாஜாலக் கூறுகள் (Fantasy elements) நிறைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தனது முந்தைய படங்களின் தொடக்கப் புள்ளியாகவும், ஒரு முழுமையான திரை அனுபவமாகவும் இருக்கும் என மாரி செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனுஷ் கொடுத்த 'பவர்ஃபுல்' ரியாக்‌ஷன்

இந்தக் கதையை முதலில் தனுஷிடம் சொன்னபோது, அவர் அடைந்த வியப்பு சாதாரணமானது அல்ல. "இது உங்கள் திரைப்பயணத்திலும், என் திரைப்பயணத்திலும் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்" என தனுஷ் பாராட்டியுள்ளார். தற்போது படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் (Pre-production) தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பிரம்மாண்டம் கோலிவுட்டையே உற்றுநோக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X