D 56: தனுஷ் 56 படத்தின் மிரட்டலான போஸ்டர்.. மீண்டும் இயக்குநர் மாரி செல்வராஜ்.. சம்பவம் உறுதி
சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர். குடும்பத்திற்காக குறிப்பாக தனது குழந்தைகளுடன் தனியாக நேரம் செலவழிக்க கூட நேரம் இல்லாமல் பிஸியாக நடித்தும் இயக்கியும் வருகிறார் என்று கூட கூறலாம். அதனால்தான் தனது குழந்தைகளை அவ்வப்போது தனது படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் சென்று விடுகிறார். இப்படி இருக்கும்போது, அவரது 56வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது அவரது 56வது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என தனுஷ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஐசரி கணேஷ் படத்தை தயாரிக்கிறார். இது தொடர்பாக தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

போஸ்டரில் மண்டை ஓடு மற்றும் போர் வாள் இருப்பதால் ரசிகர்கள் இந்த படம் கட்டாயம் போர் சம்மந்தமான படமாக இருக்குமே என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு மண்டையோடுடன் இருக்கக் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதே பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜி இரண்டாவது படம் கர்ணன். இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் தனுஷ். இந்த படத்தில் தனுஷ் ஏற்று நடித்த கர்ணன் கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருந்திப் போனது. மேலும் படத்தில் தனுஷ் பேசிய வசனங்கள் அரசியல் தளத்திலும் சமூகத்திலும் உரையாடலை ஏற்படுத்தியது. இது மட்டும் இல்லாமல் கர்ணன் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படத்திற்கு பெரும் பலம் சேர்த்தார். படத்தில் தனுஷ்ஷும் பாடல் ஒன்றைப் பாடியிருந்தார்.
மாரி செல்வராஜ்: கர்ணன் படத்தின் முதல் காட்சியிலேயே, தனுஷ் போர் வாளைக் கொண்டு, மீனை வெட்டுவார். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் பாண்டிய மன்னனின் சின்னமான மீனை வெட்டுகிறார் தனுஷ், இது பாண்டிய மன்னனை அவமானப்படுத்த எடுக்கப்பட்ட காட்சி என விமர்சனங்களை முன் வைத்தவர்களும் உள்ளார்கள். ஆனால் படத்தில் 90களில் நடைபெற்ற மிகவும் மோசமான அரச வன்முறையை அப்பட்டமாக சொன்ன படம் இது. இதனாலே பலரும் படத்தை பாராட்டினார்கள்.
போர்வாள்: மாரி செல்வராஜின் மூன்றாவது படமான கர்ணன் படத்திலும், படத்தின் போஸ்டரில் நாயகனாக நடித்த உதயநிதி கரங்களில் போர் வாள் இருந்தது. இப்படி இவரது படங்களில் தொடர்ந்து போர் வாள் இடம் பெற்றுக் கொண்டு இருப்பது ஒருவகை குறியீடாக இடம் பெற்று வருகிறது என்பதால், ரசிகர்கள் இது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்.
தனுஷ் படங்கள்: தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால் அது குபேரா. இதுவரை தனுஷ் நடிப்பில் 50 படங்கள் வெளியாகியுள்ளது. தனது 50வது படத்தை தனுஷ் இயக்கி நடித்திருந்தார். இவரது இயக்கத்தில் இவரது 52வது படமும் தயாராக உள்ளது. இவரது 52வது படம் என்றால் அது இட்லி கடை படம்தான். இது மட்டும் இல்லாமல், ஒரு ஹாலிவுட் படம், ஒரு பாலிவுட் படம் மற்றும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் ஒரு படம் என தனுஷின் லைன் - அப் அடுத்த சில ஆண்டுகளுக்கு பிஸியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











