தனுஷ் இரட்டை வேடத்தில் மிரட்டும் அசுரன் நாளை ரிலீஸ்

Recommended Video

Asuran Ammu Abirami Interview | தனுஷ் சார் எப்பவும் தட்டி கொடுத்துட்டே இருப்பார் !

சென்னை: நடிகர் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் வெளுத்து வாங்கியிருக்கும் அசுரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் நாளை அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள திரைப்படத்தின் முன்னணி கதாநாயகி மஞ்சு வாரியர் நடித்துள்ளார். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை மையக்கருவாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட கமர்சியல் திரைப்படம்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை திரைப்படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் ஜோடி கூட்டணி சேர்ந்துள்ள அசுரன் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவர்கள் கூட்டணி ஒரு ராசியான வெற்றி கூட்டணி என்பதால் இப்படமும் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

Dhanush Acted Asuran Movie will be released on October 4

தனுஷிற்கு ஜோடியாக மலையாள திரைப்படத்தின் முன்னணி கதாநாயகி மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பசுபதி, பாலாஜி சத்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்தப்படத்தில் தனுஷ் அப்பாவாகவும் மகனாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தனுஷ், மஞ்சு வாரியர் இவர்கள் இருவரும் சற்று வயதான தோற்றத்திலும் உடன் வெற்றிமாறனும் ஒரு தோட்டத்தில் அமர்ந்து சாப்பிடுவது போல் படம் பிடிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த படத்தின் பாடல்கள் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் நாளை அக்டோபர் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வடசென்னை படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர் பட குழுவினர்.

இந்தப் படம் தவிர கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம் துரை செந்தில் குமாரின் பட்டாஸ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். அவர் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நவம்பர் 15ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார் கவுதம் மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X